முடிவில்லா பயணம்

உள்ளம் ஒன்றை கண்டது
தொடுவதா
தொடர்வதா
என்னவொரு தடுமாற்றம்.....
ஒரு புள்ளி கோலத்தில்
ஒளிந்திருக்கும் அழகு
யார் விழியும் அறிவதில்லை
யாவருக்கும் தெரிவதில்லை....
காலத்தின் கால்களில்
சிக்கி நசுக்கப்பட்ட நிலை.
இதழ் அவிழ்த்த பூச்செண்டாய்
மனமேற்க்கும் காதலை.....
சிதறாத பார்வைத்துளிகளால்
எண்ணம் சிறகடிக்கும் பறவைபோல்.
அடடா என்றெண்ணி ஆட்டம்
போடும் என் நாளங்கள்.....
தீராத யோசனை
திகைப்போடு பேசுகையில்
நடுக்கம் விடுபட்டு
விரலோடு நழுவியதே.....
யாரிவர் என்றொரு கேள்வி
யாவரும் காணாத தோல்வி.
வரிந்து கட்டிக்கொள்ளும் ஆசைகளை
புரிந்து கட்டிக்கொண்டால் என்ன.
அறுபட்ட நெஞ்சம்
கொஞ்சம் அசைந்தது
விழிகளில் ஏனோ ஈரம் கசிந்தது.
காதலின் பயணத்தை சொடுக்கி
விடும் நேரம்
நினைவுக்கற்களை என்னுள்
அடுக்கி விட்டு போகும்...
நிஜங்கள் நிராகரிக்கப்பட்டு
நிறைமாத கர்ப்பிணியானேன்
உன் நினைவுகளை சுமப்பதினால்.
தொடுதலில் தொடங்கி
தொய்ந்து விடுகையில்
அகழ்விளக்கில் படர்கிறேன்
கரும்புகையாய்........
கடலின் இரைச்சலில் உணர்கிறேன்
அது கதறும் கதறலை
நரைதட்டி மொளனிக்கிறேன்
என்றும்
அவள் நினைவு தரும் ஆறுதலை......