சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015
காலையில் தோன்றி
மாலையில் மறையும்
கதிரவனுக்கு தெரிவதில்லை – நாம்
கண் விழிப்பது கிழக்கு,
கண் அயர்வது மேற்கென்று
கானம் பாடும் குயில்களுக்கும்
கலந்துண்ணும் காகங்களுக்கும் தெரிவதில்லை
கருப்புதான் நம் நிறமென்று
மனம் விரும்பும் ரோஜாவுக்கும்
மணம் வீசும் மல்லிகைக்கும் தெரிவதில்லை
மலராகிய நம் பெயர் ரோஜா, மல்லிகையென்று
கண்ட கண்ட சாதிப் பெயரைச் சொல்லி
கருப்பையில் கற்களை வளர்க்கும்
மதி கெட்ட மனிதனே
உன்மனதிற்கு மட்டும் எப்படி தெரிந்த்து
நாம் இந்த சாதியென்று!
சாதியோ...மதமோ....
உன் நிலையை சரி செய்யப்போவதில்லை
உன் வாழ்விற்கு வழி சொல்லப்போவதில்லை
இதுவரை கடந்தது போகட்டும்
இனி வரும் போகியில்
சாதியை போட்டொழி மதத்தினை மறுதலி
சாதி ஒழித்து மதம் அழித்து
சாதித்து காட்டு நீ
===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #32 வி.எம் கோவில் தெரு, தூத்துக்குடி-628001
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +919841491911