யார் வந்தாலும்

யார் வந்தாலும்
நம்
துயர்
தீராது
என்று
நீ.....இருந்துவிடாமல்
உன்
வாக்கு உரிமையை
உனதாக்கு......!!

நீ.....நிராகரிக்கும்
ஒவ்வொரு
வாக்கும்
துரோகிகள்
சுதாரித்து
விடக் கூடும்.....!!

தேசியம்
பேசிப் பேசி
தேசம்
நாசமாய்
போனது.....தெருவோர
துரோகிகளின்
திருகுதாலங்களால்......!!

மறத்
தமிழன்
எதையும்
மறந்துவிடவில்லை.....என்று
பறை
சாற்ற
படை எடு
என் தமிழினமே......!!

புலரும்
பொழுதில்
பல
புதுமைகள்
காண்போம்......!!

எழுதியவர் : thampu (8-Jan-15, 5:17 am)
Tanglish : yaar vanthaaalum
பார்வை : 64

மேலே