அவலங்கள்

வெள்ளித் திரை
என்ற பெயரில்
இளங்களின்
உள்ளம் கொளுத்தும்
ஒரு கொள்ளித்திரை!.

அந்தரங்களை
அவிழ்த்துக் காட்டும்
ஒரு கொடுங்காட்சி!.

இன்றைய இளங்களின்
வாழ்வு இதற்கு
ஓர் அத்தாட்சி! .

பாலகர்களை பாழாக்கும்
பாவிகளின்
பொழுது போக்குக் கருவி.
பொற்காலத்தைத்
தவிடு பொடியாக்கும்
தற்காலக் கொடுங்கருவி.

இளைய சமூகமே!
எங்கிருந்தோ ஒருவன்
எவனையோ சந்திக்க
ஏதோவோர் இடத்தில்
இறங்குகிறானாம்.

அதற்கு நீ ஏனடா
குழு சேர்த்து
கும்மிடிக்கிறாய்?.

உன்னை வைத்து-அவன்
பெயர் தேடிக் கொள்கிறான்.
உடன் பொருள்
தேடிக் கொள்கிறான்.
உனது குருதியை
தனக்கே செலவழிக்கிறான்
"குருவே!" என்கிறாய்.

அன்பு நண்பா!
உன் மொத்த வாழ்வின்
சொற்ப வருடங்களென்று
எண்ணுகிறாயே - அந்த
நாற்பது வருட காலத்தை
நாறடித்த பின்
நாயாக அலைவதை விட

நாற்தை பதப்படுத்து!
இதம் பெறு!.

எழுதியவர் : அ.நௌசாத் அலி (8-Jan-15, 8:39 am)
Tanglish : avalangal
பார்வை : 94

மேலே