சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப்போட்டி 2015
சாதி சாதி என்று சாதிப்பதால் தான்- நாம்
சாதிக்க தவறிவிட்டோம்...
மதம் மதம் என்று மதிப்பதால் தான்
மெளனிக்கப்பட்டுவிட்டோம்..
இனம் பார்த்து சாதம் தொடுவதென்றால்
பசியாலேயே பரதேசம் போயிருப்போம்....
பேதம் பார்த்து பணம் பெறுவதென்றால்
பிணமாகி பிறழ்ந்திருப்போம்...
நம் தேவைகெல்லாம்
சாதி மதம் துற்ந்து
போதிக்க தெரிந்த நமக்கு....
அன்பு, பாசம் , கல்யாணம், திருவிழா..
களை கட்டும்போது மட்டும்..
கலவரமான நிலவரமாக....
நிலையாத சாதி மத பேதம்
கலைக்குமெனில் சமாதான வாழ்வை
தொலைப்போமே அவற்றை...
இணையமிணைக்கும் உலகமதில்
தனியனாய் சாதிக்க ஏதுமில்லை..
இணைவோம் இனியொரு யுகம் செய்வோம்...
இக் கவி எனது சொந்த படைப்பு என உறுதிப்படுத்துகிறேன்.
அஜந்தா ஜினி பகீரதன்
யாழ்ப்பாணம்
இலங்கை
0094779672058