கதிரவனின் நிழல் கூட
காலை எழுந்தவுடன்
நீ என் கண்ணில்
கதிரவனாய் காட்சி
தருகிறாயே ஏன்?.
கதிரவன் உன்னை
காதலிக்கிறானா? இல்லை
கதிரவனை நீ
காதலிக்கிறாயா?..
உன்னை காதலிக்க தான்
காலை கதிரவன்
எழும் முன்னே நான்
எழுந்து விடுகிறேன்..
கதிரவன் உன் முகத்தில்
தெரியும் போது நான்
கதிரவனை மேகமாய்
சென்று மறைக்க தோன்றுகிறது..
கதிரவனின் நிழல் கூட
உன் மீது பட கூடாது
என் உடல் மட்டுமே
நிழலாய் நிஜமாய் பட வேண்டும்..