நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதை போட்டி -2015

தன்னை மறந்தாலும் தன்
தமிழை மறக்காதே
உன்னை மறந்தாலும் உனக்கு
உயிர் ஊட்டும் தமிழை மறக்காதே

முக்கனியை சுவைக்க மறந்தாலும்
முத்தமிழை சுவைக்க மறக்காதே
முத்தத்தை மறந்தாலும்
முத்தமிழை மறக்காதே

அன்பை மறந்து அகிலம் கடந்து
ஆங்கிலம் கற்று அடிமையாய் உழைக்காதே
இன்பம் இழந்து இழந்ததை மறந்து
ஆங்கிலம் கற்று
அகிலம் ஆள்வாயா

தமிழை காக்க தமிழனாய் வாழ்க
தமிழை வளர்க்க தன் உயிர் காக்க
இன்றைய விதை நாளைய மரம்
இன்றைய விதைகளாக மாறுவோம்
நாளைய தமிழ் மரங்களாக வளர்வோம்
நாளைய தமிழ் மலர்களாக மலர்வோம்

ஆசையை மாற அன்பை மறக்காதே
ஊழலை ஒழி உழைப்பை அளிக்காதே
தன்னலம் மாற தமிழை மறக்காதே

மொத்தத்தை மறந்தாலும் உன் தமிழ்
யுத்தத்தை மறக்காதே
தமிழை காப்போம் தமிழராய் வாழ்வோம்


கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்
பெயர் ;இன்பகுமார் .மு வயது ; 25
இடம் ; வேலூர் மாவட்டம் , சென்னங்குப்பம் .
அலைபேசி எண்:9597128761

எழுதியவர் : inbakumar (8-Jan-15, 2:12 pm)
பார்வை : 101

மேலே