இப்படியும் காதலிப்போம் தைப்பொங்கல் கவிதைப்போட்டி 2015
காற்றாகவும்,
கடல் கொண்ட நீராகவும்,
கண்ணுக்கெட்டா வானாகவும்,
கருத்துளையாகவும்,
காமம் தாண்டி கருணையாகவும்,
காதலிப்போம்,
இனி நீயும் நானும் தண்டி, - நீண்ட
இவ்வுலகில் உள்ள அனைத்தையும்
காதலால் காதல் செய்வோம்.
இப்படியும் காதலிப்போம்
இன்பம் மட்டுமே எல்லோருக்கும் வேண்டுமென்றே
வேண்டி காதல் செய்வோம்..
கொத்து கொத்தாக கொன்று குவிக்கும்
குண்டு சப்தம் விடுத்து,
குயில்போல் கொஞ்சிடும்
மழலைகளின் சப்தம் கேட்க வேண்டி - இயற்கையை
கெஞ்சிக் காதல் செய்வோம்.
இனிவரும் தலைமுறையும்
இப்படியே காதல் செய்ய, நாமும் காதல் செய்திடுவோம்.