நந்த வனக் குயிலே
பவளக்கொடி பேரு
நீர் எடுத்து நடப்பா பாரு.
மெல்லிய இடையினிலே
இடுக்கிய குடமும்.
தடக்கி விழுவது போல்
தாவணியும் உடுத்திய
அழகி அவள்.
நீர் எடுக்க அவள்
வந்தால் ஆட வந்த
மயில் திகைத்து
நிட்கும்.
நீந்தும் வாத்தும்
விழித்து நிட்கும்.
காற்ரோடு சேர்ந்து
தாமரையும் தலை
அசைக்கும்.
அவள் பாதம் பட்ட
புல் தரையும் மோட்ஷம்
பெறும்.
பள பளக்கும்
தங்கத் தடாகமாய்
அவளும் அருவியின்
அருகில் ஓர் சிலையாய்.
கொலுசு போடும்
ஒரு விதமான இசையும்
ஒரு தினுசான நடையும் .
இவைகளை இடை
போட்டு போட்டு
நான் வடித்தேன் பல
கவிகளை வளர்ந்தேன்
வளர்ந்தேன் தடை
இல்லாக் கவிஞனாய்.
வாடா மல்லிகை அவள்
நான் அள்ளி எடுக்கத்
துடிக்கும் கள்ளி அவள்.
அவள் தன் கரம்
கொண்டு உச்சி
மேலே ஏற்றினாள்
முட்டி.
நான் அவளின்
நெஞ்சு மேலே
ஏற்றுவேன் காதல்
பெட்டி.
வட்டியாகப் போடுவேன்
காலில் ஒரு ஜோடி
மெட்டி.
அவள் எட்டி எட்டிப்
போனாலும் விட
மாட்டேன் நந்தவனத்துக்கு
வந்த குயிலுடன்
சொந்த இசை பாடாமல்