மனிதம் கொன்று பாவிகள் ஆகாதீர்கள்
பத்துமாதம் சுமந்து
பகலிரவாய் கண்முழித்து
பாலூட்டி வளர்த்த அன்னை
பச்சாதாபம் இன்றி பரிதவிக்க விடும்
பாதகம் இன்றும் நம்மிடையே
இன்று நீ செய்கிறாய் அது
நாளை உனக்கு
ஏன் புரியவில்லை உனக்கு
இதுபோல் வாழ்வா உன் பிறப்பு
பிற்ப்பு கொடுத்தவளை வீதியில் விட்டு
பிள்ளையென்று எப்படி சொல்வீர்
பிறந்த பிறப்பின் அர்த்தம் கொண்று
பூமியில் வாழ்ந்து என்ன பயன்
கருவறை கொடுத்து
இரத்தத்தை பாலாக்கி
இரவு பகல் விழித்து
ஊண் உறக்கம் விடுத்து
உனக்காக வாழ்ந்த ஜீவனை
உன் சந்தோஷத்திற்காக
வீதியிலே விரட்டி விடும்
வீணாய் போன வீணர்களே
எழு பிறப்பிலும் இல்லை நிம்மதியே
தாயிற் சிறந்த கோவில் இல்லை
தரணியில் அதற்கு நிகர் இல்லை
தாயை மதிப்பவன் தோற்றதில்லை
தாய் நல்ல ஆசான் இல்லை
தாய்மையில் இல்லை வேறுபாடு
தரம் பிரித்து தரம் தாழ்வதா உன் பாடு
நம்பவைத்து கழுத்தறுத்து
இருக்கும் வரை அனுபவித்து
காலம் கடந்தகாலத்திலே
சுமையென நீ சுடுநீர் ஊற்றலாமோ
ஒதுங்க ஒர் இடம்
ஒருபிடி சோறு உனக்கு பாரமானதா
ஒதுக்கப்படும் நேரம் உனக்கும் வரும்
தறிகெட்ட மனிதா..
அப்போது உணர்வாய்
தாய்மையின் தரத்தை ..
பாவத்தில் பெரிய பாவம்
பாசத்தில் வந்த விணை
தாய் தந்தை பேணாமை
தக்கதண்டனை உனக்கும் வரும்
தடுத்துக்கொள்ள முடியாது உன்னால்
தாய்மை மதியா தனியே விடும்
தகாத மதி கொண்ட சில ஆத்மாக்களுக்கு
தலையில் குட்டு வைக்கும்
தமிழ்மகள் கவி இதுஃஃஃஃஃ