தவம்
காதல் தேவதை
கனவில் வந்தது
காட்சியில் உந்தன்
காதல் சொன்னது
பேசும் மொழியிலே
அர்த்தம் இல்லையே
அன்பே உன் அகத்தில்
ஆயிரம் அர்த்தமே
மௌனம் கொண்ட இந்த
பெண்மை சிரிக்குது
மெல்ல நீ வந்து
மெதுவாய் நின்றதும்
கண்ணில் காதல் கொண்டு
சொல்லாமல் சென்றதும்
சொல்லாத போதும்
துடிக்கும் மனமே
தூது வர யாருமில்லை
தூதாக நான் அனுப்பினேன்
தூயவா இந்த
தும்பை மனசைதான்
மனம் எனும் கோவிலில்
மணிமகுடம் சூடவா
சூடும் நாள் வரை
தூயவா உன் நினைப்பு
பாடும் பைங்கிளி
பாடி வரும் சேதிகண்டு
நீயும் திரும்பும் வரை
நிற்காதிந்த தவம் என்றோ
காதல் தேவதை சொன்னசேதியில்
காத்திருக்க வேண்டுமோ
காத்திருப்பதில் காலம் போகலாம்
தவமிருப்பதில் எதுவுமாகலாம
தந்தேன் எனை தருவேன் எனை
தவத்தின் பலனை தருவாய் நீயும்
தவத்தின் வரமே தவிக்கும் மனமே
தனியும் தாகம் அது
தவத்தில் முடியும் கோலம்...
காதல் தேவதை சொன்னகதை இது
கனவில் வந்தது காட்சியானது..///
ஃஃஃகவிக்குயில் சிவரமணிஃஃஃஃ