வாழ்க்கை

அதிவேக புகைவண்டியாய்
ஆண்டுகள்தான் கடக்கிறது ...
ஆண்டுகளைவிட மெதுவாக - நம்
வேண்டுதல்தான் நடக்கிறது ...

தேடித்தேடியே தேய்கிறது
தேகமும்நம் நாளும்தான்
எதைத்தேடிப் போனாலும் - முடிவில்
எஞ்சுதுதுளி ஞானம்தான் ...

பிறப்பதுவும் இறப்பதுவும்
எதுக்கென்றே தெரியவில்லை
பிறக்கும்போதே அழவைத்தான் - பிரச்சனை
தொடங்கியதென்று அறியவில்லை

புத்தன்போல வாழவும்
புத்திஇடம் தரவில்லை
சக்கிகொண்டு மோதினாலும் - எதுவும்
சட்டென்று வருவதில்லை

எத்தனையோ கடவுள்கள்
யாரும்யாரையும் கண்டதில்லை
இறந்துபோனவன் ஒருவன்கூட - வந்து
ஏன்னிறப்புனு சொன்னதில்லை

ஒன்றுமட்டும் புரிகிறது
வாழ்க்கைஎன்பது ஒன்றுமில்லை
வந்துபோகும் பூமிக்கு - வாடகை
தந்துபோவதே உன்வேலை

உனக்கெனசேர்த்தது அத்தனையும்
பூமிக்கே வாடகையாகும்
உலகுகெனசேர்த்தது மட்டும்தான் - பூமியில்
உன்னுடையதாய் என்றும்வாழும்

என்றும் எழுத்தாணி முனையில் ....
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (9-Jan-15, 5:43 pm)
சேர்த்தது : கவிமணி
பார்வை : 156

மேலே