எதை எழுதுவது
கவிதை எழுத
மனத்துடிப்பு...
எதை எழுத ..?
சமூக அவலத்தைச்
சாடிப் பார்த்தேன்
புலம்பல்களாகப்
புறப்பட்டு வருது .
கிடைக்காத வேலை ,
நடக்காத மறுமணம் ,
எரிகின்ற வன்முறை ,
எழுதிப் பார்த்தேன்
ஒப்பாரிகளாக
உருமாறிப் போச்சு
அரசியலை
அலசிப் பார்த்தேன்
வசை மொழிகளாய்
வாடை வீசுது
எழுகின்ற கதிரையும்
விழுகின்ற நிலவையும்
இன்ன பிற
இயற்கையையும் -
அன்பே,ஆருயிரே -
காதலையும்
எழுதிடலாம்
ஆனால்
ரோம் எரிய
பிடில் வாசித்த
கதையாய்
என் தேசம் அழ
நான் சிரிப்பதா?
எனவே
எழுதாமல்
மூடிவைத்தேன்
என் எழுதுகோலுடன்
மனதையும் .....
________
சு.கோவிந்தராஜ்