சுகோவிந்தராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகோவிந்தராஜ் |
இடம் | : காங்கேயம் |
பிறந்த தேதி | : 02-May-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 4 |
குடிமகன் தாழ்ந்தாலென்ன?
கார்ப்பரேட் வாழ்ந்தால்போதும்
காடு அழிந்தாலென்ன?
கமிஷன் வந்தால் போதும்.
ஊருக்கு நன்மை பயக்கும்
ஒருதிட்டமேனும் உண்டா?
யாருக்கு நன்மை செய்ய
அன்னிய நிறுவனமிங்கே?
பாவஞ்செய்யா அரசியல்வாதி
பாரதத்தில் இருப்பின்-அவர் பாதம்தொட்டு வணங்குகிறேன்
பரவட்டும் அவர் கொள்கை .
ஊழல் இல்லா அரசியல்வாதி
ஒருவரேனும் இருப்பின் - என் இதயம் தொட்டு நம்புகிறேன்
மலரட்டும் மக்களாட்சி.
-சு.கோவிந்தராஜ்
இரண்டே சாதி -தமிழ்ச்
சான்றோர் கூறியது
இட்டார்,இடாதோர்
இஃதன்றி வேறில்லை
கேட்டோமா ?
முட்டிக்கொண்டு
மோதினோம்
வெட்டிக்கொண்டு
வீழ்ந்தோம்
வாழ்ந்தோமா?
ஆதி நாளில் ஏது சாதி ?
ஆரியனோடு வந்ததே -இந்த
ஆகாத சாதி என்னும் சதி
மனங்களைப் பிரிக்கும்
மதமும் வேண்டாம்
சனங்களைப் பிரிக்கும்
சாதியும் வேண்டாம்
மாண்புகளைச் குழைக்கின்ற
மதமும் வேண்டாம்
சமத்துவத்தை அழிக்கின்ற
சாதியும் வேண்டாம் .
உதிரம் தேடுகின்ற நோயாளி
சாதி,மதம் சொல்லிக்கொண்டு காத்திருந்தால்
சாகும் முன்பாவது வந்துவிடுமா அவன்
சாதி உதிரம்
சாதியினால் செத்தவர்கள்
பல நூறு
சாதியினால் வாழ்ந்தவர்கள்
எத்தனை
தேனல்ல விஷம்
உழுது பயிரிட்டு
ஊருக்கெல்லாம் உணவிட்ட
உழுகின்றார் அழுகின்றோம்
உதவி செய்வார் யாருமின்றி...
அம்பானி முதல்
அன்றாடங்காய்ச்சிவரை
அனைவருக்கும்
அன்னமிட்ட விவசாயி...
அழுகின்றோம் நாங்கலெல்லாம்
ஆதரிப்பார் யாருமின்றி...
பருத்தி விதைத்தவனை
வருத்தி வதைக்கலாமா?
நெல்லு நட்டவனை
"கொல்"லென்று சொல்லலாமா?
கத்தரி விதைத்தவனை
கத்தரித்து விடலாமா ?
பஞ்சு கொடுத்தவனை
நஞ்சு அருந்தவிடலாமா?
சாகுபடி செய்தோரை
சாகும்படி விடலாமா?
நொய்யரிசி கொடுத்தோர்க்கு
வாய்க்கரிசி போடலாமா?
மீத்தேனை விரட்டிட
விதியொன்று
சொல்லுங்கள்-இச்
சாத்தானை விரட்டிட
சாத்திரமொன்று சொல்லுங்கள
எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் & வாசிக்கும் சக நண்பர்களுக்கு,
எந்த ஒரு கட்டுரை, கவிதை அல்லது கதையை நீங்கள் வாசித்த பின்பும் எழுதியவரை உற்சாகப்படுத்த விரும்பும் நமது மனோநிலை இயல்பானதுதான் என்றாலும், மிகச் சாதரணமாய் அல்லது அசுவாரஸ்யமாய் எழுதப்படும் படைப்புகளில் போய் நாம் நட்பு பாராட்டுகிறோம் என்பதன் பெயரில் அந்த ஆக்கத்தை மிகைப்படுத்தி கருத்திடும் போது....
அந்த கட்டுரையை எழுதியவர் தன்னை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. 40 கருத்துரைகளில் 35 கருத்துரைகள் ஆகா...ஒகோ, அட்டகாசம் என்ற ரீதியில் இருந்து விட்டால் தான் சரியான பாதையில் செல்வதாக அந்த எழுத்தாளர் நினை
கவிதை எழுத
மனத்துடிப்பு...
எதை எழுத ..?
சமூக அவலத்தைச்
சாடிப் பார்த்தேன்
புலம்பல்களாகப்
புறப்பட்டு வருது .
கிடைக்காத வேலை ,
நடக்காத மறுமணம் ,
எரிகின்ற வன்முறை ,
எழுதிப் பார்த்தேன்
ஒப்பாரிகளாக
உருமாறிப் போச்சு
அரசியலை
அலசிப் பார்த்தேன்
வசை மொழிகளாய்
வாடை வீசுது
எழுகின்ற கதிரையும்
விழுகின்ற நிலவையும்
இன்ன பிற
இயற்கையையும் -
அன்பே,ஆருயிரே -
காதலையும்
எழுதிடலாம்
ஆனால்
ரோம் எரிய
பிடில் வாசித்த
கதையாய்
என் தேசம் அழ
நான் சிரிப்பதா?
எனவே
எழுதாமல்
மூடிவைத்தேன்
என் எழுதுகோலுடன்
மனதையும் .....
________
சு.கோவிந்தராஜ்
கவிதை எழுத
மனத்துடிப்பு...
எதை எழுத ..?
சமூக அவலத்தைச்
சாடிப் பார்த்தேன்
புலம்பல்களாகப்
புறப்பட்டு வருது .
கிடைக்காத வேலை ,
நடக்காத மறுமணம் ,
எரிகின்ற வன்முறை ,
எழுதிப் பார்த்தேன்
ஒப்பாரிகளாக
உருமாறிப் போச்சு
அரசியலை
அலசிப் பார்த்தேன்
வசை மொழிகளாய்
வாடை வீசுது
எழுகின்ற கதிரையும்
விழுகின்ற நிலவையும்
இன்ன பிற
இயற்கையையும் -
அன்பே,ஆருயிரே -
காதலையும்
எழுதிடலாம்
ஆனால்
ரோம் எரிய
பிடில் வாசித்த
கதையாய்
என் தேசம் அழ
நான் சிரிப்பதா?
எனவே
எழுதாமல்
மூடிவைத்தேன்
என் எழுதுகோலுடன்
மனதையும் .....
________
சு.கோவிந்தராஜ்
ஆசிரியர்:
எதுக்குடா நேத்துவரல
மாணவன் :
தாத்தா செத்துட்டாரு சார்
ஆசிரியர் :
அப்பறம் எதுக்குடா பாட்டி செத்துட்டாங்கன்னு லீவ் லெட்டெர்ல எழுதி இருக்க
மாணவன் :
தாத்தா செத்து போன அதிர்ச்சில மாத்தி எழுதிட்ட சார்..................
செத்து விட தோணுதடி...
உந்தன் செந்தமிழை கேட்காமல்...
பத்து நாள் ஆகுதடி...
உந்தன் பாச முகம் பார்க்காமல்..
எத்திசையும் புரியவில்லை...
எந்தன் அருகில் நீ இல்லாமலே...
அத்தனையும் வெறுத்து விட்டேன்..
அன்பே நீ இல்லாமல்..
ஆங்கிலத்தில் பேசிவிட்டால் அர்னால்டும் அடிமையடி..
தங்கத்தால் மின்னுகின்ற காதணிக்கு கைதியடி
பிரிய மனம் இல்லையடி...
நம் பொருளாதாரம் பிரித்ததடி..
செத்திருப்பேன் எப்போதோ...
உந்தன் நினைவுகளை மறந்திருந்தால்..
நன்றி சொன்னேன் கடவுள் என உன் நினைவுக்காய் முதலுதவி செய்த மருத்துவரை காணவில்லை..
நினைவென்ற ஒன்றே இல்லாமல் போயிருப்பின்
நிச்சயமாய் இறந்திருப்பேன்...நினைத்துக்க