மலரட்டும் மக்களாட்சி
குடிமகன் தாழ்ந்தாலென்ன?
கார்ப்பரேட் வாழ்ந்தால்போதும்
காடு அழிந்தாலென்ன?
கமிஷன் வந்தால் போதும்.
ஊருக்கு நன்மை பயக்கும்
ஒருதிட்டமேனும் உண்டா?
யாருக்கு நன்மை செய்ய
அன்னிய நிறுவனமிங்கே?
பாவஞ்செய்யா அரசியல்வாதி
பாரதத்தில் இருப்பின்-அவர் பாதம்தொட்டு வணங்குகிறேன்
பரவட்டும் அவர் கொள்கை .
ஊழல் இல்லா அரசியல்வாதி
ஒருவரேனும் இருப்பின் - என் இதயம் தொட்டு நம்புகிறேன்
மலரட்டும் மக்களாட்சி.
-சு.கோவிந்தராஜ்