நினைவே மருந்து

செத்து விட தோணுதடி...
உந்தன் செந்தமிழை கேட்காமல்...
பத்து நாள் ஆகுதடி...
உந்தன் பாச முகம் பார்க்காமல்..

எத்திசையும் புரியவில்லை...
எந்தன் அருகில் நீ இல்லாமலே...
அத்தனையும் வெறுத்து விட்டேன்..
அன்பே நீ இல்லாமல்..

ஆங்கிலத்தில் பேசிவிட்டால் அர்னால்டும் அடிமையடி..
தங்கத்தால் மின்னுகின்ற காதணிக்கு கைதியடி

பிரிய மனம் இல்லையடி...
நம் பொருளாதாரம் பிரித்ததடி..

செத்திருப்பேன் எப்போதோ...
உந்தன் நினைவுகளை மறந்திருந்தால்..

நன்றி சொன்னேன் கடவுள் என உன் நினைவுக்காய் முதலுதவி செய்த மருத்துவரை காணவில்லை..
நினைவென்ற ஒன்றே இல்லாமல் போயிருப்பின்
நிச்சயமாய் இறந்திருப்பேன்...நினைத்துக்கொண்டே இறந்திருப்பேன்...

எழுதியவர் : மனோஜ் sutharsan (4-Jan-15, 11:30 am)
Tanglish : ninaive marunthu
பார்வை : 103

மேலே