இப்படியும் காதலிக்கலாமே

எல்லோரும் காதல் தேவதைகளால் ஆசிர்வதிகபடுகிறர்கள்
சிலர் மட்டும் தான் காதல் தேவதைகளால் படைக்கப்படுகிறார்கள்
நீங்கள் காதலுக்கு பிறந்தவர்கள்
இல்லறம் நடந்தேற பணம் போதும்
அது நல்லறமாய் மாற அன்பு வேண்டும்
காதலாகி கசிந்துருகி வாழ்ந்தவர்கள் நீங்கள்
நீங்கள் வாழ்க்கையை மற்றும் பயிற்ருவிக்கவில்லை
காதலையும் சேர்த்து கற்றுதந்தீர்கள்
வள்ளுவன் வாசுகி கண்டதில்லை நாங்கள்
பார்த்து வளர்ந்தது எல்லாம் உங்களை கண்டுதான்
ஆடம்பர பரிசு பொருட்களே காதலின் சின்னம்
என்றானபோது
காதலையே பரிசாய் பரிமாறி வாழ்ந்தவர்கள் நீங்கள்
இருவரும் காதலில் விழுந்தவர்கள் அல்ல
காதலில் எழுந்தவர்கள்
தெருவில் கைகோர்த்து நடந்ததில்லை
ஆனால் உங்கள் பார்வைகள் கைகோர்த்தபடியே இருந்தன
இருவரும் சேர்ந்து ஒரு விடியல் கண்டீர்கள்
நீ இன்றி நான் இல்லை என்று கவிபடியது இல்லை
ஒரு நிமிடம் கூட பிரியேன் என்று சத்தியமிட்டது இல்லை
வார்த்தைகள் உங்கள் காதலை வர்ணித்ததில்லை
நீங்கள் வாழ்ந்த வாழ்கை உங்கள் காதலை விளக்கியது
'நான்' பூட்டிய புலன்களுடன் காதல்
'நாம்' பூட்டிய கதவுகளுக்குள் காதல்
'நாங்கள்' பூட்டை துளைத்து எல்லைகள் கடந்த அன்பு
வட்டத்துக்குள் அன்பு செய்யும் உலகத்தில்
எல்லைகள் கடந்து எல்லோரையும் நேசிக்க கற்றுத் தந்தது நீங்கள்
நல்ல பிள்ளைகளாய்
நல்ல கணவன் மனைவியாய்
நல்ல மனிதனாய்
என்று வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை வாழ்ந்து காட்டியது நீங்கள்
காதலுடன் வாழ்க்கையை வாழ கற்றுத்தந்த
எம் பெற்றோர்
இப்படியும் காதலிக்கலாம் என்று கற்றுத்தந்த நீங்கள்
இன்று போல் என்றும் காதலால் ஆசிர்வதிக்கபடுவீர்கள்
காதலாகி கசிந்துரு.......

எழுதியவர் : keerthaan (4-Jan-15, 1:24 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
பார்வை : 75

மேலே