தேனல்ல விஷம்

தேனல்ல விஷம்

உழுது பயிரிட்டு
ஊருக்கெல்லாம் உணவிட்ட
உழுகின்றார் அழுகின்றோம்
உதவி செய்வார் யாருமின்றி...

அம்பானி முதல்
அன்றாடங்காய்ச்சிவரை
அனைவருக்கும்
அன்னமிட்ட விவசாயி...
அழுகின்றோம் நாங்கலெல்லாம்
ஆதரிப்பார் யாருமின்றி...

பருத்தி விதைத்தவனை
வருத்தி வதைக்கலாமா?
நெல்லு நட்டவனை
"கொல்"லென்று சொல்லலாமா?

கத்தரி விதைத்தவனை
கத்தரித்து விடலாமா ?
பஞ்சு கொடுத்தவனை
நஞ்சு அருந்தவிடலாமா?

சாகுபடி செய்தோரை
சாகும்படி விடலாமா?
நொய்யரிசி கொடுத்தோர்க்கு
வாய்க்கரிசி போடலாமா?

மீத்தேனை விரட்டிட
விதியொன்று
சொல்லுங்கள்-இச்
சாத்தானை விரட்டிட
சாத்திரமொன்று சொல்லுங்கள்.

உண்மையைச் சொல்லுங்கள்
எங்களை கொல்ல வந்த
மீத்தேன் என்பது
தேனல்ல விஷம் தானே?
-சு.கோவிந்தராஜ்

எழுதியவர் : சு.கோவிந்தராஜ் (17-Feb-15, 3:12 am)
பார்வை : 91

மேலே