நாம் அந்திகள் அல்ல
நாம் அந்திகள் அல்ல...!
உடலின் தண்டனை.....
மனங்களின் போராட்டம்.....
மண்ணின் மௌனம்......
ஆன்மாவின் பரிசு.....
யென மிளிரும் -
மரணம் முடிவல்ல....
இனிய தொடக்கம்...!
ஆம்...
தீப்பெட்டியுள்ளிருந்து
விடுபட்ட தீக்குச்சி...
தீக்குளித்தற்கு பிறகே
திருவிளக்காய் சுடர்கிறது...!
கூண்டுக்குள் வாழும்பொழுது
புலாலுக்கு மட்டுமே
உதவும் புறா....
பறக்க தொடங்கிய
பிறகோ.... பசுமை மிகு
காட்சியாக பரிணாமம்
அடைகிறது....
எனவே -
நாம் அந்திகள் அல்ல...!