வேண்டும் சாதி
இரண்டே சாதி -தமிழ்ச்
சான்றோர் கூறியது
இட்டார்,இடாதோர்
இஃதன்றி வேறில்லை
கேட்டோமா ?
முட்டிக்கொண்டு
மோதினோம்
வெட்டிக்கொண்டு
வீழ்ந்தோம்
வாழ்ந்தோமா?
ஆதி நாளில் ஏது சாதி ?
ஆரியனோடு வந்ததே -இந்த
ஆகாத சாதி என்னும் சதி
மனங்களைப் பிரிக்கும்
மதமும் வேண்டாம்
சனங்களைப் பிரிக்கும்
சாதியும் வேண்டாம்
மாண்புகளைச் குழைக்கின்ற
மதமும் வேண்டாம்
சமத்துவத்தை அழிக்கின்ற
சாதியும் வேண்டாம் .
உதிரம் தேடுகின்ற நோயாளி
சாதி,மதம் சொல்லிக்கொண்டு காத்திருந்தால்
சாகும் முன்பாவது வந்துவிடுமா அவன்
சாதி உதிரம்
சாதியினால் செத்தவர்கள்
பல நூறு
சாதியினால் வாழ்ந்தவர்கள்
எத்தனை பேர் ?
மதத்தினால் மாண்டவர்கள்
பல்லாயிரம்
மதத்தினால் மாண்புற்றோர்
எத்தனை பேர் ?
மனித குலம் மாண்புபெற
சாதி வேண்டும் -அது
ஆண்,பெண் சாதியென்ற
இரண்டும் போதும்.
-சு.கோவிந்தராஜ்