கிருத்திகா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கிருத்திகா |
இடம் | : trichy, sathiram |
பிறந்த தேதி | : 29-Mar-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 6 |
நீ வைத்த
கருவாட்டுக் குழம்பில்
காதல் வாசம்.......!
**
உன் ரயிலில்
நான் சக பயணி.
என் ரயிலில்
நீயே பயணி..!
**
அதிகாலை கூந்தல் முடிச்சில்
சிக்கிக்கொண்ட என் மீசையை முறுக்கும்
அவளோடு நான் காதல் வசம்.
அது அவ்வளவும் மோக வாசம்.
**
பசிப்பது போல
வலிக்கிறது உன் நினைவு.
**
எனக்கான வாழ்க்கையில்
திரைக்கதையை நீ எழுதாதே..!
உனக்கான கதையை
நான் எழுதமாட்டேன்...!
**
என் நூலகத்தில்
நீ வாசிக்கப்பட்ட புத்தகம்.
**
என் தலையெழுத்து
ஓர் அந்தரங்க கவிதை
**
ஒரு தனியறை
ஒரு மேஜை
ஒரு பேனா
ஒரு நாள்
ஒரு நான்
ஒரு கவிதை
ஒரு வாக்குமூலம்
ஒரு மரணம்
***
உன் இதழ்
படித்ததில் பிடித்தது.
(கௌரவ கொலை என்ற பெயரில் சாதி வெறியில் பெற்ற மகளையே கொலை செய்த கொடூரம் மனதை மிகவும் வதைத்தது அதன் அடிப்படையில் எழுந்த வரிகள் )
உயர் சாதியென்று
ஆணவத்தில்
அலைகிறீரே
உயர்சாதி என்பதற்காக
நீ கழித்த மலமும்
பூச்செண்டாய் மணக்குமோ?
நீ தொடுவதால்
சுடும் நெருப்பும்
குளிர்ச்சியாய் இருக்குமோ?
நீ இறங்குவதனால்
கடலும் தன் ஆழத்தை
குறைக்குமோ?
நீ குடிப்பதனால்
சாக்கடையும்
தேவாமிர்தமாய்
இனிக்குமோ?
நீ உடுக்கும் உடையில்
சாதி பார்த்தால்
நீ
நிர்வாணமாய்
அலையவேண்டியிருக்கும்!
நீ உண்ணும் உணவில்
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !
ந
ஒருவர் - ஒரு டீ போடுயா
கடைக்காரர் - சாதா டீயா ஸ்பெஷல் டீயா சார் ?
ஒருவர் - அது என்னையா சாதா டீ
ஸ்பெஷல் டீ
கடைக்காரர் - பால்ல வெந்நீர் கலந்தா அது ஸ்பெஷல் டீ சார் அதே வெந்நீர்ல பால கலந்தா சாதா டீ சார்
ஒருவர் - அதுலான் ஒன்னும் வேணாம் சூப்பர் டீ ஒன்னு போடுயா
கடைக்காரர் - அது என்ன சார் சூப்பர் டீ?
ஒருவர் - ம்ம்ம் தண்ணீல கொஞ்சம் விஷத்த கலந்து குடு அதுதான் சூப்பர் டீ உன் கடைல டீய வாங்கி குடிக்கிறதா விட அது எவ்வளவோ மேல்
கடைக்காரர் - ?????
( ஒரு டீ கடையில் சாதா டீ குடித்த அனுபவத்தால் எழுதப்பட்டது)
படித்ததில் பிடித்தது.
பெண்கள் தனக்கென்று நிலையான ஒரு வேலையில் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்வது சரியா?
பெண்கள் தனக்கான ஒரு நிலையான வேளையில் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சரியா?
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ....
சத்தமில்லாம அழியுது வயக்காடு!
பயணிகளிடம் கையெந்துது பாரு
மழலைப் பூமுகம் பசியோடு !
மீந்தஉணவை குப்பைளிட்டார் -சிலர்
குப்பையுள்ளதை தேடி உண்பார்!
சொத்துக்கு சண்டையிட்டு
சொந்தமெல்லாம் பிரியுது !
பண்பாடு பாரம்பரியம்
பட்டிமன்ற பேச்சாச்சு!
பயங்கரவாதமெல்லாம்
பந்தாவா அரங்கேறுது !
கற்பழிப்பு நிகழ்ச்சியோ
சுதந்திரமா நடக்குது !
வேலைக்கு போனபெண்ணோ-பொணமா
சாலையோரம் கடக்குது!
சாலைகளில் விபத்தெல்லாம்
சரளமா நடக்குது - மனபாரம் கொண்டவர்களிடம் ........
பிணம் கொடுத்து பணம் கேப்பதை
கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ............
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ....
சத்தமில்லாம அழியுது வயக்காடு!
பயணிகளிடம் கையெந்துது பாரு
மழலைப் பூமுகம் பசியோடு !
மீந்தஉணவை குப்பைளிட்டார் -சிலர்
குப்பையுள்ளதை தேடி உண்பார்!
சொத்துக்கு சண்டையிட்டு
சொந்தமெல்லாம் பிரியுது !
பண்பாடு பாரம்பரியம்
பட்டிமன்ற பேச்சாச்சு!
பயங்கரவாதமெல்லாம்
பந்தாவா அரங்கேறுது !
கற்பழிப்பு நிகழ்ச்சியோ
சுதந்திரமா நடக்குது !
வேலைக்கு போனபெண்ணோ-பொணமா
சாலையோரம் கடக்குது!
சாலைகளில் விபத்தெல்லாம்
சரளமா நடக்குது - மனபாரம் கொண்டவர்களிடம் ........
பிணம் கொடுத்து பணம் கேப்பதை
கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ............
கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!
“அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்தால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை.
வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள்.
கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத
நண்பர்கள் (14)

முஹம்மது தல்ஹா
துபாய் (லால்பேட்டை)

senthivya
sankarapuram

புதுவைக் குமார்
புதுவை

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
