பிரபு ரஞ்சி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரபு ரஞ்சி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 21-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 8 |
கவிதை...
உறவுக்கு உயிர் கொடுக்க
உதிரத்துக்கு அர்த்தமாகி
உணர்வுகளை சுமந்து
ஏக்கங்கள் எல்லாம்
விடுப்பு எடுக்காமல் என்னிலே காத்துகிடக்க
துணையாக நீ கிடைத்தாய்
என் துயர் துடைக்க
பிஞ்சு கைகளில் என்னை தீண்டி
மெல்லமாய் கடித்த விளையாடி
அம்மா என்று மழலை மொழியில்
நீ என்னை அழைக்கையில்
இந்த ஜென்மம் உதிர்த்தேனே...
மதியழிந்த வேளையொன்றில்
உனையிழந்து உயிர் சுமந்து - இன்று
உன் நலம்கருதி வீதியிலே
துச்சமென வீசிச் செல்கின்றாயே ....
பிழையின்றி தண்டனையும்
துணையின்றி வாழும் கொடுமையும்
அவனின்றி கருசுமந்த நாளில்
நீயும் உணர்ந்திட்ட வலிதானே பெண்ணே....
ஒரு நொடியில் உதறிவிட்டாய்
உன் பாதை நோக்கி சென்றுவிட்டாய்
உலகம் உருட்டி விளையாடும் - இனி
ஒவ்வோர் நாளும் நரகமாகும்
ஒழுக்கம் துறந்து உறவு மறந்து
ஒன்று கூடிவிட்டீர் உடற்பசிக்காக
உங்களால் உரிய வயது வருமுன்னே
பல இழிவுக்கு ஆளாகும் - வெறும்
அரைசாண் வயிற்றுப் பசிக்காக....
தவறி விழுந்த காரணத்தால்
தரமில்லா தாயாகிப் போனவர்களே
தயை கூர்ந
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம்...
உண்மைலேயே இது நமக்கு ஒரு இனிய மாலைப் பொழுதாகத் தான் அமைந்து விட்டது இன்று நண்பர்களே... அதி விரைவாக மிகப் பரபரப்பாக நடைபெற்று இப்போது நல்லபடியாக நிறைவு பெற்று இருக்கிறது 'இன்னும் சற்று நொடிகளில்' என்னும் இந்தக் கவிதைப் போட்டி...
போட்டியில் பங்கேற்ற கவிதைகளுக்கான , இரண்டு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு , போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிய முடிவுகள் என் கைகளில் இருக்கும் இந்த வேளையில் , முடிவுகளை அறிவிப்பதற்கு முன் சில விஷயங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன் நண்பர்களே...
ஒரு எண்ணம் , நம் மனதில் அதுவாகவே தோன்றுவதற
கவிதை...
விழியோடு விழுந்தவளே
விழிநீரில் கரைந்து
விலகிச்செல்கிறாயடி.
வழிகின்ற கண்ணீரை துடைக்க
உன் பூவிரல் இல்லையேடி
துடிக்கின்ற தருணத்தில்
தாங்கிக்கொள்ள உன் தாய் மடி இல்லையேடி.
வாழ்க்கையும் போனதடி
வாலிபமும் தவித்ததடி
நீ என்னை வருடிய நினைவுகள் கூட இல்லையடி
வருத்தத்தில் நினைத்து நிம்மதி கொள்ள.
துணையில்லா வாழ்க்கையில்
இணையில்லா உன் அன்பு
அலை பாயுதடி.
தினம் தினம் இறக்கும்
இன்னலை எதற்காகடி
எனக்கு பரிசாய் கொடுத்தாய்.
உன்னை நினைத்ததற்கு
நான் இறக்கின்றேன் ஒவ்வொரு நொடியும்
என்னடி பாவம் செய்தேன்
தழுவி அணைக்க உன் தேக ஸ்பரிசம் இல்லையேடி
தாயாய் என்னை சுமப்பாய்
இந்த
எழிலான
மன நிலை
இன்று
பங்களாக்களில்
வசிக்கும்
எந்த மனிதருக்காவது உண்டோ ???
கேள்விக்குறி தான்!!!!!
இயற்கையை
சார்ந்த வாழ்க்கை !
இயல்பான
வாழ்க்கை !
இருப்பதை
இன்பமாய் அனுபவிக்கும் வாழ்க்கை !
இது இப்படி தான் என
இயல்பாய் வாழும் வாழ்க்கை
இந்த நாள்
இனிமை என ஏற்கும் வாழ்க்கை !
இன்னல்கள் வந்து போகும்
என மனதில் பதித்து வாழும் வாழ்க்கை !
மன சலனமற்று
துரித வாழ்க்கையின் பின்
பேயாய் பிசாசாய் ஓடாது
எம தர்மராஜாவை எட்டத்தே நிறுத்தி
கருவறையிலிருந்து
வெளி வரவும் சில்லறை
கல்லறை செல்லவும் சில்லறை
என இருந்தாலும்
பணம் எனும் தாளிற்கா
என்ன... இன்னொரு டைம்..... ரிகர்சல் பாத்துக்கலாமா.....
ஒ எஸ்........ கிளைமாக்ஸ்.... சொதப்பிட்டா... நல்லா இருக்காது.....
எல்லாரும் கவனிங்க...... தலைவர்..... இந்த வழியா வரார்.... நாது.....(என்னடா அப்டி பாக்கற..... உன் கதாபத்திர பேர் தான.... பிடிச்சு தான நடிக்க ஒத்துக்கிட்ட.....)
பயமா இருக்குடா.....
நாடகமே முடிய போகுது.. இபோ போய் பயந்தா எப்டி....... சரி....... ஒன்னும் ஆகாதுடா.... பொது தளத்துக்கு வந்துட்டோம்னா..... அப்புறம்.... பயப்பட கூடாது..... ஓகே,.ஓகே...... லிசன்..... பாபு .. மேடை பக்கம் வரணும்...(பாபு... நாத்துக்கு கொஞ்சம் டைம் கொடு.. நீங்க ரெண்டு பேரும் டைம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க.
மல்லிகையே!!
உன் அங்க இதழ்களை
தொடும்போதெல்லாம்
ஆயிரம் உணர்வுகள் பிறக்குதடி
உணர்வுகள் ஒவ்வொன்றையும்
உதறிவிட்டு
காற்றிலே கலக்கிறாயடி
காற்றிலே கலந்தாலும்
என் ஜீவன்
உன் ஜீவனோடு
சங்கமிக்குமடி...
விழி மூடும் கனவில்
வெளிச்சத்தை உடுத்திக்கொண்டு
பூத்து குலுங்கும் புல்வெளிக்கிடையில்
இன்ப உலா நடத்தும்
அதிசய நிகழ்விலே
இருதயத்தை பரிசாக்கி கொண்டாயோ
இரு விழியும் மூடிக்கொள்ள
இனம்புரியாத ஓர் உணர்வு
உன்னாலே உயிர் பெறுதே
உலகமும் சுற்ற மறந்திடுதே
உன் நினைவில் நான் சுற்றுவதாலே
இனியவனே...
கவிதை...
கண்களோடு பேசும் சில நிமிடங்கள் போதும்
வாழ்நாளும் மீண்டும் பிறக்கின்ற நேரம்
உயிரோடு நானும் உரையாடும் போது
இதழோடு சேர்ந்து இதயமும்
தடுமாறி துடிக்கும்
உதடுகள் சொல்லாத நிகழ்வை
விழியோடு வழியும் உப்பு நீர் உரைக்கும்
சோகத்தை சுமந்து உயிரின் ஆழம் வரை
உணர்வுகளில் கரைந்து வெளிப்படும்
மெளன மொழியின் பிறப்பிடமே
விழிகளின் வாசல் தான்
என்னோடு தான் விலகாத மேகம்
இமையோடு தான் உறவாடும் சோகம்
வெண்மேக கூட்டங்கள் வீதியுலா செய்து
என் விழி வீட்டிற்கு வருகை செய்ய
கண்ணீரும் கன்ன (...)