என் காதலியே இன்னும் சற்று நொடிகளில் -போட்டிக்கவிதை

கவிதை...

விழியோடு விழுந்தவளே
விழிநீரில் கரைந்து
விலகிச்செல்கிறாயடி.
வழிகின்ற கண்ணீரை துடைக்க
உன் பூவிரல் இல்லையேடி
துடிக்கின்ற தருணத்தில்
தாங்கிக்கொள்ள உன் தாய் மடி இல்லையேடி.
வாழ்க்கையும் போனதடி
வாலிபமும் தவித்ததடி
நீ என்னை வருடிய நினைவுகள் கூட இல்லையடி
வருத்தத்தில் நினைத்து நிம்மதி கொள்ள.
துணையில்லா வாழ்க்கையில்
இணையில்லா உன் அன்பு
அலை பாயுதடி.
தினம் தினம் இறக்கும்
இன்னலை எதற்காகடி
எனக்கு பரிசாய் கொடுத்தாய்.
உன்னை நினைத்ததற்கு
நான் இறக்கின்றேன் ஒவ்வொரு நொடியும்
என்னடி பாவம் செய்தேன்
தழுவி அணைக்க உன் தேக ஸ்பரிசம் இல்லையேடி
தாயாய் என்னை சுமப்பாய் என்று
நினைக்க
நான் சுமக்கிறேனடி உன்னை ஆயுள் முழுவதும்...

எழுதியவர் : பிரபு ரஞ்சி (15-Feb-15, 10:47 am)
பார்வை : 52

மேலே