வரலாற்று யாத்திரைகள் 1- ஒரு பக்க கதைகள்

என்ன... இன்னொரு டைம்..... ரிகர்சல் பாத்துக்கலாமா.....

ஒ எஸ்........ கிளைமாக்ஸ்.... சொதப்பிட்டா... நல்லா இருக்காது.....

எல்லாரும் கவனிங்க...... தலைவர்..... இந்த வழியா வரார்.... நாது.....(என்னடா அப்டி பாக்கற..... உன் கதாபத்திர பேர் தான.... பிடிச்சு தான நடிக்க ஒத்துக்கிட்ட.....)

பயமா இருக்குடா.....

நாடகமே முடிய போகுது.. இபோ போய் பயந்தா எப்டி....... சரி....... ஒன்னும் ஆகாதுடா.... பொது தளத்துக்கு வந்துட்டோம்னா..... அப்புறம்.... பயப்பட கூடாது..... ஓகே,.ஓகே...... லிசன்..... பாபு .. மேடை பக்கம் வரணும்...(பாபு... நாத்துக்கு கொஞ்சம் டைம் கொடு.. நீங்க ரெண்டு பேரும் டைம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க... மியூசிக்.... இம்மி பிசக கூடாது...... லைட்டிங்..... நீங்க.... ஓகே தான...

ரெட் வித் எல்லோ...மிக்சட்ல.... புது வண்ணம் செட் பண்ணிருக்கோம்....

ஓகே.ஓகே.......... கன் ..... வொர்க் ஆகுதானு ஒரு டைம் செக் பண்ணிக்கோ.... .... கன் பயர் ஆனதும்.... நெஞ்ச அழுத்தற மாதிரி.... ப்லெட்...பாக்கெட்ட... உடைச்சுக்கோ..... ரெம்ப நேரம் அழுத்திட்டு இருக்காத...

ம்ம்ம்..... அப்புறம்... கேர்ல்ஸ்..... நீங்க... சூட் பண்ணின பின்னால... ரியாக்ட் பண்ணினா போதும்.. போன ஒத்திகையில ... நீங்க... ரியாக்ட் பண்ண காத்திட்டு இருந்தது தெரிஞ்சது..... இந்த வாட்டி... சரியா பண்ணுங்க... அட்மாஸ்பியர்.... நீங்க.... என்ன நடந்துச்ன்னே... தெரியாம.. மெல்ல மெல்ல சம்பவத்தை உள் வாங்கிட்டு நாதுவ பிடிக்க ஓடுங்க.... ஓகே. ஓகே.. எவரிதிங்..... ஓகே தான...ஓகே லெட்ஸ் ஸ்டார்ட்......

கிளைமாக்ஸ்... நாடகத்தில்......

பாபுஜி மேடை.... நோக்கி வருகிறார்....... நாதுராம் .... பாபுவைக் காண வந்தவர் போல மேடைக்கு அருகே சென்று.. பாபுஜி முன்னே கை கூப்பி நிற்கிறார்....

நாடகம் கண்டு கொண்டிருக்கும் கூட்டம்.... கண்கள் விரிய அடுத்த காட்சியைப் பார்க்கிறது....

கண நேரத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து.... டப் டப் டப்...........

நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிகிறார்.... நாதுராம் கோட்சே..........

கவிஜி

எழுதியவர் : கவிஜி (1-Feb-15, 10:29 am)
Tanglish : tap tap tap
பார்வை : 236

மேலே