சாறமேற்றும் உப்பு
எல்லாம் கடந்துபோகும்
மனதை அழுத்தும்
துலாப் பாரம் வந்திடினும்
அதைத் தாங்கும்
தட்டாயிரு!
இலை உதிர்ந்தபின்
வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால்
மரத்திற்க்கு வசந்தகாலமேது?
கடந்தவை திரும்பி
வரப்போவதுமில்லை!
வந்தவையெல்லாம் இங்கே
நிலைக்கப்போவதுமில்லை!
இனி வருவதை
யாரும் அறியப்போவதுமில்லை!
சொல்லக்கூடாத சோகங்கள்
ஆயிரம் இருக்கலாம் நெஞ்சில்
யாவற்றையும் தீயில் பொசிக்கிவிடு!
ஓயாமல் அடிக்கும்
கடலலைகள் போன்றது
வாழ்வில் துன்பம்!
அலையும் அடிக்கும்
நுரையும் மிதக்கும்
நீ மட்டும் கரையாயிரு
என்றும் கரையாதிரு!
வாழ்க்கை என்றுமே
புரியாத புதிர்!
அதனால்தான் அதன்
அர்த்தங்கள் யாருக்குமே
புரிவதில்லை!
புரியாமலிருப்பதே நன்று
புரிந்துவிட்டால்
வாழ்வில் ஏது சாரம்
வாழ்வில் சாரமேற்றும்
உப்புதான்
இன்பமும் துன்பமும்
இன்பமென்றால் நிலைபெற வாழ்த்து
துன்பமென்றால் தூற்றாமல் போற்று!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
