உழவு
1. உயிர் கொடுக்கும் உழவே
உயர்த் தொழில்!
2. உலகின் அச்சாணி உழவன்!
3. உரிமையோடு வாழ்பவர் உழவர்
மற்றெல்லோரும் தொழுதுண்டு வாழ்பவரே!
4. உழவரைப் போற்றும் அரசே
உலகைக்காக்கும் அரசு!
5. இரந்துண்ணவும் மாட்டார்
இரந்தவருக்கு ஒளிக்கவும் மாட்டார்!
6. உழவன் வேலை நிறுத்தினால்
உலகிற்கேது உணவு!
7. புழுதியையும் பொன்னாக்கி
உயிர் கொடுப்பவன் உழவன்!
8. உடலென்னும் உலகிற்கு
உரம் பாய்ச்சுபவன் உழவன்!
9. உழவன் கால்படாவிட்டால் இந்நிலமகளும்
அவன்பால் ஊடல் கொள்வாள்!
10.பொருளொன்றுமில்லை எனும் சோம்பேறிகளைக்
கண்டு இந்நிலமகளும் நகைப்பாள்!
(திருவள்ளுவப் பெருமானின் ‘உழவு’ அதிகாரத்தைத் தழுவியது)
“உழவையும் உழவர்களையும் மதிப்போம்!
அவர்களை ஊக்கப்படுத்தி வந்தனம் செய்வோம்!”
இவண்,
கோ.குப்பன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
