நாள் காட்டி

வரவேற்பறை
நாள்காட்டி
பூஜை அறையில்
புது பொலிவோடு!!.....
பொட்டு வைத்து
அழகுபார்கிறாள்
இளம் விதவை?!.......

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்தில்
நாள்காட்டி?!......

கோவில் திருநீறு
பத்திரமாய்
நாள்காட்டியின்
நாள் தள்ளிப் போன
கிழிந்த பக்கத்தில்?!.......

குப்பை வண்டியில்
இறுதி ஊர்வலம்?!........பழைய நாள்காட்டி

பூஜைப் பூவின்
புதிய வாசத்தில்
சகாவரம் பெற்றது
சாமி படம் போட்ட
பழைய நாள்காட்டி?!.........

பழைய பஞ்சாங்கம்
மாற்றப்படுமா?!.....
புதிய நாள்காட்டியிலாவது?!.......

வீட்டுச் சிறையிலிருந்து
விடுதலையானது
கௌரி பஞ்சாங்க நாள்காட்டி?!.....

அறுதி பெரும்பான்மையோடு
இறுதி உறுதிதான்!!......இருந்தபோதிலும்
கவிதையில் தொடர்கிறது
நாள்காட்டியின் பயணம்?!......

அறிவு கெட்ட கழுதைக்கு உணவானது
இன்றைய ராசிபலன் சொன்ன ராசியில்லாத
நாள்காட்டியின் கடைசி பக்கம்?!..........

மாலை அணிந்த கோலத்தை
தாரை வார்த்தது
புதிய நாள்காட்டிக்கு
பழைய நாள்காட்டி?!...........

எழுதியவர் : வைகை அழகரசு (10-Jan-15, 2:08 pm)
Tanglish : naal kaatti
பார்வை : 137

மேலே