நாள்காட்டி

பட்டையும்
ருத்ராட்ச கொட்டையும்
காப்பாற்றி இருக்கலாம்
பழைய நாள்காட்டியை?!......

கொழுந்தியாவை
ஆரத்தி எடுக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறது
என் படம் போட்ட
பைத்தியக்கார நாள்காட்டி?!......

வெற்றுப் புன்னகையில்
வருடா வருடம்
வயதைக் குறைக்கும்
நடிகையின் நடிப்பின் சூட்சுமம்
புரிந்தே வைத்திருக்கிறது - புத்திசாலி நாள்காட்டி

அத்தனையும் இழந்து நிற்க
எந்த வங்கியில் கடன் வாங்கியதோ?!....
ராகு குளிகை எமகண்டமெல்லாம்
அறிந்த நாள்காட்டி!!....

வாஸ்து தெரிந்த நாள்காட்டிக்கு
தோஸ்து சரியில்லை போலும்?!......

சுவரோடு உறவு கொண்ட
நாள்காட்டியும் மாற்றப்படலாம்?!....
வாஸ்து சாஸ்திரப்படி.......

குப்பை மேடையில்
எப்படி சொல்லும்
தன் கடைசி ஆசையை
பழைய நாள்காட்டி?!......

இயற்கை உர தயாரிப்பை
ஊக்கப்படுத்த தன் உடலை
தானமாக வழங்கியது - பயன்படுத்தப்பட்ட
பழைய நாள்காட்டி!!.........

நல்ல நேரம் பார்த்து பார்த்து
தோற்றுப் போனவர்களே அதிகம் - அனுபவ நாள்காட்டி

வெட கோழியும்
கெடா விருந்தும் கேட்கிறது - பூப்பு
புன்னகையில் புது நாள்காட்டி?!.....

கவர்ச்சியில் உருக்கும்
குல்பியிடம் ரெசிபி கேட்டு
செல்பி எடுத்துக்கொண்டது
புதிய நாள்காட்டி!!.....

நாள்காட்டி பிள்ளையாருக்கு
சிதறு தேங்காய் போட்டது யார்?!.....
நீங்களா?!...நீங்களா?!.....
தெரிதவர்கள் சொல்லுங்கள்!!....

எழுதியவர் : வைகை அழகரசு (10-Jan-15, 2:48 pm)
Tanglish : naalkaati
பார்வை : 238

மேலே