ஒரே நாளில் பணக்காரனாக வீடு, கம்பேனியை ஒரே நாளில் முன்னேற்ற
கேட்டுக்கோங்க மக்களே! வீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில் முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லை – ஆனால் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.
முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்தி வைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடி போய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)
கிழக்கு பார்த்து இருக்கும் கதவை இடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)
எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்கு வரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)
அலுவலக கண்ணாடிகளை ஸ்டிக்கர் கொண்டு மறைத்திடவும்! (அப்பறம் எதுக்கு கண்ணாடின்னு கேட்கப்பிடாது). இப்ப உங்களை யாராவது பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடிக்கு மிக அருகில் வந்துதானே பார்க்க முடியும்! அப்படின்னா நீங்க அவங்களை விட்டு தூரமா முன்னேறிட்டிங்கன்னு அர்த்தம்!
வடகிழக்கு மூலையில் இருக்கும் கழிவறையை இடித்துவிட்டு தென்மேற்கு மூலையில் வைக்கவும் (வெளிய போறதுதானே எந்தப்பக்கம் போனாத்தான் என்ன? என்றெல்லாம் பேசக்கூடாது!)
வீட்டின் உட்பகுதியில் உயரத்தை கூட்டவும். உயரமா வாழ்ந்தாத்தான் சீக்கிரமா உயர முடியும்!
அமரும் அலுவலக டேபிளை யாருக்கும் தெரியாதவாறு, உங்களை மறைத்தவாறு மாற்றிவிடவும்! (உங்கள் வளர்ச்சி யாருக்கும் தெரியாது, தடுக்க முடியாதில்லையா?)
இதையெல்லாம் நகைச்சுவை என்று கருதுபவர்களுக்கு! நூற்றில் என்பது சதவிகிதம் வீடு, கம்பெனிகள் இதில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டையாவது கடைபிடிக்கிறார்கள்!
இப்ப உங்களுக்கும் முன்னேற ஆசை வந்திடுச்சா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்