எது காதல்

கரை ஒதுங்கும் கடற்கரை காதலுக்கு மத்தியில் ,
கறை இல்லா ஒரு காதல் செய்வோம் ..

மறைவு தேடும் மாசுக் காதலுக்கு மத்தியில் ,
மணவறை தாண்டி ஒரு காதல் செய்வோம் ..

உடலை ரசிக்கும் உணர்ச்சி காதலுக்கு மத்தியில் ,
உணர்வை ரசித்தே ஒரு காதல் செய்வோம் ..

பணம் பார்க்கும் பளிங்கு காதலுக்கு மத்தியில் ,
நல்மனம் பார்த்து ஒரு காதல் செய்வோம் ..

ஏமாற்றம் காணும் ஏழை காதலுக்கு மத்தியில் ,
மாற்றம் காண ஒரு காதல் செய்வோம் ..

பிரிதல் கொள்ளும் புரிதலற்ற காதலுக்கு மத்தியில் ,
பிரியம் கொண்டே ஒரு காதல் செய்வோம் ..

பிறையென தேய்ந்து மறையும் காதலுக்கு மத்தியில் ,
நரை விழுந்தும் ஒரு காதல் செய்வோம் ..

உலகம் சிரிக்கும் உவமை காதலுக்கு மத்தியில் ,
உலகம் வியக்க ஒரு காதல் செய்வோம் ..

மதத்தில் முடங்கி மடியும் காதலுக்கு மத்தியில் ,
மனிதம் சிறக்க ஒரு காதல் செய்வோம் ..

சாதிகள் உடைத்து எறியும் காதலுக்கு மத்தியில் ,
சாதிகள் உடைக்க ஒரு காதல் செய்வோம் ..

இதயத்தில் அடங்கி போகும் காதலுக்கு மத்தியில் ,
இமைக்குள் மொழியாக ஒரு காதல் செய்வோம் ..

திருந்தாத சில திருட்டு காதலுக்கு மத்தியில் ,
திகட்டாத வண்ணம் ஒரு காதல் செய்வோம் ...

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (12-Jan-15, 1:52 pm)
பார்வை : 284

சிறந்த கவிதைகள்

மேலே