நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதைப்போட்டி 2015

படி தமிழா, நூலைப்படி
படி தமிழா, நல் நூலைப்படி
நம்பாட்டன் வள்ளுவனைப்படி
நின்றிடு அவன் சொற்படி…!

குடி நிறுத்திடுவாய் நம் தமிழ்க்குடி காக்கும்படி
செடி வளர்த்திடுவாய் இடி, மின்னல் மழையடிக்கும்படி
தடியெடுத்திடுவாய் சாதிமதமொழியும் படி
காதல் வளர்த்திடுவாய் நல் சமூகம் உருவாகும் படி
பொருள் சேர்த்திடுவாய் சமூகம் காக்கும் படி
தத்தமது குழந்தைக்கு பெயர் வைத்திடுவாய்
நம் தமிழன்னைக்கு விளங்கும் படி…!

படி தமிழா, படி
உரக்க படி, துரோகிகள் காதை பிளக்கும் படி..!
படி தமிழா படி
நாளைய தமிழரும், தமிழும் தழைத்தோங்கும் படி-பின்
நம் அறிவின்படி, நின்றபடி
தமிழ் படித்த நாமும், நாம் படித்த தமிழும்
கொடிபற்றிய மரமும், மரம் வளர்க்கும் கொடியுமாய்
வாழும் படி..! வளரும் படி..!
தமிழ் படி..!


( இப்படைப்பு நான் சொந்தமாய் எழுதியது என உறுதி அளிக்கிறேன் . )

பெயர்: சக்திவேல் காந்தி
வயது: 28
தற்பொழுதைய வதிவிடம்: சாங்வான் பல்கலைக்கழகம், சாங்வான், தென்கொரியா
அழைப்பிலக்கம்: +821023775586

எழுதியவர் : சக்திவேல் காந்தி (12-Jan-15, 7:25 pm)
பார்வை : 99

மேலே