இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015

பெண்ணே நானுனைக் காதலிக்கிறேன்..!
பேணும் உன்னுள்ளம் கடந்த
ஆளுமை அழகுக்கு,
ஆளுமை மூளை கடந்தென்
பேணல், அழகாய் காதல் வயப்படுகிறது..!

காதல்வயப்பட்டதும், பெண்சுதந்திரம் உண்டாவெனக்கேட்கிறாயா,
பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்க, ஆண் நான் யார்?
ஆணெனக்கும் பிறப்பு கொடுக்கவல்லது
பெண்ணொருவள் ஆயிற்றே!
பின்னெப்படி, நீயென் அடிமையாவாய்!
பின்னென்ன வேண்டும் எனக்கேட்கிறாயா?

பெண்ணே, நானுனைக் காதலிக்கிறேன்
நீ சுவைக்க உன்னிதழ்கள் போதும் மாறாய்
மற்றோர் கண்கள் சுவைக்க உன்னிதழில் சாயம் வேண்டா..!
நீ பார்க்க உன்கண்கள் போதும் மாறாய்
மற்றோர் பார்த்து வியக்க அதனில் மை வேண்டா..!
நீ திரும்பும் பொருட்டு உன் கழுத்து போதும் மாறாய்
மற்றோர் திரும்பி பார்க்க அதிலொன்றும் அணிய வேண்டா..!
பெண்ணே, காந்தத் தன்மை உலகை இயக்கலாம்,
நமை இயக்கவல்லது மனிதம் மட்டுமே,
பின்னெதற்கு செயற்கை சேர்மானம்..!

உனக்காய் நானும், எனக்காய் நீயும்
சாதி துறந்தால் போதும்,
சாதித்துவிடலாம் காதல் வாழ்வில்!

( இப்படைப்பு நான் சொந்தமாய் எழுதியது என உறுதி அளிக்கிறேன் . )

பெயர்: சக்திவேல் காந்தி
வயது: 28
தற்பொழுதைய வதிவிடம்: சாங்வான் பல்கலைக்கழகம், சாங்வான், தென்கொரியா
அழைப்பிலக்கம்: +821023775586

எழுதியவர் : சக்திவேல் காந்தி (12-Jan-15, 7:33 pm)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 88

மேலே