போ நீ போ
தனியாக தவிகின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பாடல் என் வரிகளில்
உன் சிரிப்பும் என் மனதில் அலையாகும்
உனைக்கான என் கண்கள் மழையாகும் அன்பே போ …
என் இசை கூட உன் கொலுசின் ஒளியாகும் அன்பே போ …
உன் கால் கொலுசின் மணி தட்டும் கடல் அலையாவேன் அன்பே போ …
கிளி பேச்சும் உன் குரலில் என் மனதில் அன்பே போ …
உன் நிழல் கூட என் மனதில் நிலவாகும் அன்பே போ …
உன் முத்தம் நான் பெற்ற உயிராகும் அன்பே போ …
நீ சொல்ல ஒரு வார்த்தை காதல் தான் அன்பே போ …
என் பேச்சில் உன் வாசம் நினைவில்லையா அன்பே போ …
என் வலி கூட உன் கண்ணீர் துளியாகும் அன்பே போ …
விஷம் கூட உன் இதழில் தேன் துளியாகும் அன்பே போ …
என் கண்கள் உனைப்பிரிய மறுக்கின்றதே அன்பே போ …
மண் வாசம் மழையாலே மறக்காதே அன்பே போ …
என் காதல் உன் அன்பின் பிழையாலே
மறந்தாயே அன்பே போ …
என் மரணம் உன் பிரிவின் மறு கணமே அன்பே போ …
இருந்தாலும் இறந்தாலும் உன் அன்பை
மறப்பேனா அன்பே போ …

