சாதி ஒழி மதம் அழிசாதி பொங்கல் கவிதை போட்டி 2015

மனிதனுக்குள்ளே சகமனிதனை எதிர்க்கும்
சமூக எதிர்ப்பு திட்டம் -சாதி
ஆண்டவன் பெயரால் 'அண்டியவன் சதி'
அதை நீ ஒழி!

இந்து மதமாம் நச்சு மரத்தின்
கிளையாம் சாதி!
வர்ணம் உடைக்கும் கோடாரியால்
அதன் வேரையும் நீ உடை!

மனித மனதுக்குள்ளே நுழைந்த சாத்தான்
உணர்வில் புகுந்து உயிர் கொல்லும் வைரஸ்
தொற்று நோயாய் பிற மதமும் புகுந்து
ஆட்டும் பீடை !-சாதியை எறி [ரி]!

சாஸ்திரம்,புராணம் ,புளுகு மூட்டைகள்
கடவுளர் பெயரால் அளந்த கதைகள்
அனைத்தையும் அழிப்போம்!

தன்னம்பிக்கை கொல்லும்
கடவுளே வேண்டாம்!
மதத்தின் பெயரால்
எதுவும் வேண்டாம் !

கோவில் இல்லா ,சாதி சங்கம் இல்லா
தமிழகம் மாற்றுவோம்!
அகமணமுறை அறவே நீக்குவோம்!
அறிவில் சுகந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் பெறுவோம்!

அறிவைக் கொல்லும் மத,மூட நம்பிக்கைகள் ஒழிப்போம்!
தமிழர்கள் எல்லாம் ஒரே கூரையின் கீழ் என்றாக்குவோம்!

புதிய தமிழகம் படைப்போம்!


இங்கு

புனிதமும் இல்லை,தீட்டும் இல்லை
'மாற்றத்தால் ஆயது உலகு' என்பதே இதன் எல்லை.

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (13-Jan-15, 1:32 pm)
பார்வை : 324

மேலே