ரயிலில் ராட்சசி

சில மணி நேர காத்திருப்பு ..எனக்கான ரயில் என்னைநோக்கியபடி..இரவு எட்டு மணி இருக்கும்...அதில் ஏறி எனக்கான இருக்கையை தேடி பிடித்து அமர்ந்தேன்...ரயிலும் தனது பயணத்தை தொடர்ந்தது... பயணச்சீட்டு சரிபார்க்கப்பட்டபின் நானும் சிறிது நேரம் ஜன்னல்வழியே வெளியில் பார்த்து ரசித்துவிட்டு படுத்துவிட்டேன்...ஒவ்வொரு விளக்காக அணையத் தொடங்க ரயில் இருளில் மூழ்கியது... தடக் தடக் ரயிலோசை இசைஞானியை நியாபகப்படுத்தியது...ஊ என்றபடியே ரயிலும் பாய்ந்து கொண்டிருந்தது...
நானும் அயர்ந்த தூக்கத்தில்...
" எக்ஸ்கியுஸ் மீ " என்றது ஒரு குரல்...பலமுறை அழைத்திருக்கும் போல .. குரலிலே தெரிந்தது...

திடுக்கிட்டு விழித்தெழுந்தேன் நான்... கும்மிரிட்டிலும் பளிச்சென்று மின்னும் சோடியம் விளக்கின் பிரகாசம்...

********************"ராட்சசியாய் அவள்"*********************************
சொல்லுங்க என்றேன் நடுக்கத்துடன்... S3-487 என்னது என்றாள் அவள்.. கடும் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதவனாய்...

என்னோடது தான் என்றேன் வாயில் மட்டும் புன்னைகையுடன்...

என்னது என்றாள் .. என்னோடது என்றேன் ... டிடிஈ வந்துவிட்டார் ... அவரும் அவளது டிக்கெட்டை வாங்கி சரிபார்த்தப்பின் .. மேடம் இது நாளைக்கு போக வேண்டிய டிக்கெட் நீங்க தான் தப்பா இன்னைக்கே வந்துடீங்க என்றார். தவறுதலாக ஏதோ செய்து இருக்கிறாள் என்பதை அவள் நாக்கை கடிப்பதிலிருந்தே தெரிந்துகொண்டேன்...
என்னம்மா பண்ணப்போற என்றார் டிடிஈ அவளிடம் மிருதுவாகவே... அவள் பெண் என்பதால்... "அவரும் ஆண்தானே" ...
எனக்கோ சைடு லோயர் பெர்த் ... சார் மனசு வச்சா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம்... பைன் கட்டிடுங்க 633 என்றார்.... அவளும் பைன் கட்டிவிட்டு என்னை ஒரு ஓரப்பார்வையோட இரக்கத்தோடு பார்த்தாள் .. நானோ வேண்டா வெறுப்பாக கொடுபதுபோல் நடித்து இருக்கையை அட்ஜஸ்ட் செய்து கொள்ள ஒத்துக்கொண்டேன்...
ஒன்றாக உறவாடிக்கொண்டிருந்த சைடு லோயர் எங்களால் பிரிக்கப்பட்டது ...
ஓகே இந்த பேக் ஐ பார்த்துகோங்க என்றபடி நான் வாசல்படி நோக்கி சென்று நின்றேன் காற்று வாங்குவதற்காக... சில நிமிடங்கள் கழித்து அவளும் என்னை நோக்கி ... என்னங்க தம் அடிக்க வந்தீங்களா.. இங்கலாம் அடிக்க கூடாது தெரியுமா...? பெரிய பிரச்சனை பண்ணிடுவாங்க அப்படி இப்படி னு ஏதேதோ பேசிக்கொண்டே போனாள் ... மேடம் மேடம் கொஞ்சம் நிறுத்துங்க ... என்று என்னால் சொல்ல முடியவில்லை நான் அவள் பேசும் அழகை ரசித்துக்கொண்டிருந்ததால்.... மேலும் என்னென்னவோ பேசி இருப்பாள் போல .. ஹெலோ ஹெலோ ஹெலோ என்ற கட்சி மூன்று வார்த்தைகள் மட்டும் என் காதில் விழுந்து சகஜ நிலைக்கு திரும்பினேன்....
மீண்டும் பிரித்து வைக்கப்பட்டிருந்த சைடு லோயர் பெர்த்தில் ஆளுக்கு ஒரு சைடு இல் உட்கார்ந்து கொண்டோம்... முதல் சில நிமிடங்கள் மௌனம் ... நேரம் செல்ல செல்ல கொஞ்சம் ஏதேதோ பகிர்ந்தோம் ... கடைசியில் எல்லாம் பகிர்ந்து கொண்டோம்... நீங்க தூக்கம் வந்தா தூங்குங்க என்றால் அவள் நானும் அதையே அவளிடம்... இருவருக்கும் கண்கள் கிறங்கின .... காற்றும் உர்ர் உர்ர் என்று பயமுரிதியது ... அவளும் அழகாக கொண்டு வந்த சால்வையால் தனது தலையை நன்றாக போர்த்திக்கொண்டாள்... டெட்டி பியர் போல அவள் எனது பார்வையில்... நானும் தூங்கி தொலைத்துவிட்டேன் ...
விடிந்து விட்டதை சூரியன் சொல்லிசென்றது... நான் விழிக்க அவள் எனக்கு முன்பே விழித்திருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக்கொடுத்தது ...
ரயிலும் தாம்பரம் நோக்கி விரைய நானும் அவசர அவசரமாக இறங்க ஆயத்தமானேன்... தாம்பரமும் வந்தது நானும் இறங்க அவளும் என்னோடு இறங்கி விட்டாள் ... ரயிலும் ஊ என்றபடி எங்களுக்கு டாடா காட்டிச் சென்றது... அவளோ "எக்ஸ்கியுஸ் மீ" இது மாம்பழம் தானே என்றாள் ... என்ன நக்கலா என்றேன்... கண்டுபுடிச்சுடீங்களா ....? என்றாள் செல்லமாக...
"ஹாப்பி ஜார்னி" என்று எனது நண்பன் முதல் நாள் இரவு அனுப்பி இருந்த எஸ்.எம்.எஸ் தாமதமாக வர அதை எடுத்து பார்த்து சிரித்துக்கொண்டே சென்றேன்... அவன் வாக்கு பலித்ததால் ...
-ஜி.உதய் ...

எழுதியவர் : -ஜி.உதய் ... (14-Jan-15, 2:45 pm)
சேர்த்தது : க உதய்
பார்வை : 415

மேலே