உழவன் மகள் - மகிழினி

சீரும் சிறப்புமாய் இனிதாய் மீண்டும் ஒரு தமிழர் திருநாளின் தொடக்கம் ...... வீண் எண்ணங்களை எரித்து புது ஆண்டில் அடி எடுத்து வைக்க வழிவகை செய்யும் திருநாளாய் இந்த போகி ......

என் எண்ணங்களுடன் இக்கட்டுரையை துவங்குகிறேன் ...... நான் ஒரு குடியானவனின் வீட்டு கடைசி பெண் இந்த உழவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்தவள் என்ற வகையில் ..... மீண்டும் எங்களின் கால்கள் வாய்க்கால் வரப்பை சந்திக்குமா என்று தெரியவில்லை...... சரியான விளைச்சல் இல்லாமல் சரியான லாபம் இல்லாமல் வெறும் நஷ்டத்திற்காக வேளாண் தொழில் செய்து தோல்வி கண்டு கிராமங்களை விட்டு வெளியூர்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பல்லாயிரம் குடியான மக்கள்களில் நானும் என் குடும்பமும் அடங்கும்.......

உங்கள் வாழ்க்கையில் இயற்கையோடு நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? உங்கள் ஆரோக்கியத்திற்காக நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் ? நீங்கள் உண்ணும் உணவில் எத்தனை மக்களின் உழைப்பு உள்ளது என்பதை உங்கள் குழந்தைகள் அறிவார்களா?

உங்களின் வருங்காலத்திற்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வேளாண்மை பற்றிய சிறிதளவு புரிதலையாவது ஏற்படுத்தி இருக்குறீர்களா ? 112 கோடி மக்களில் சுமார் 70 சதவீதம் மக்கள் கிராம வாசிகளாகத்தான் இருக்கிறார்கள்.... நம் நாட்டை தவிர ஏனைய அமெரிக்க ஆப்பரிக்க அரேபியா நாடுகளுக்கும் சேர்த்தே உணவுப்பொருட்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்... அவர்கள் மூன்று நேரம் உணவு உண்கிறார்களோ இல்லையோ நாம் அனைவருக்கும் மூன்று நேர உணவுகளுக்கு மேலாகவே உணவை தருகிறார்கள்......

ஒரு பக்கம் நம்முடைய உணவு உற்பத்திகளை உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறோம் மறு புறம் நம்மக்கள் உணவின்றி பட்டினியால் இறந்து வருகிறார்கள் ...... நெல்லுக்கும் கரும்பிற்கும் மானிய விலை கிடைக்காமல் போகிறது .... கன்னட நாட்டில் இருந்து நதியும் நீரும் தஞ்சையை எட்டிப் பார்ப்பதிற்குள் ஓராயிரம் மனுக்கள் உயர் நீதி மன்றம் , உச்ச நீதி மன்றம், பிரதம அலுவலகம் சென்றுவிடுகிறது..... குறும் தானியங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது...

இதற்கிடையில் மீதேன் எடுக்கிறேன் வெங்காயம் புடுங்கிறேன் அப்டின்னு செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மரபணு விதைனு கற்பழிக்கப்பட்ட நம் நிலத்தை மேலும் மேலும் பிரேத பரிசோதனை செய்யும் வெளிநாட்டு மத்திய அரசியல்.. ஆயிரம் தொல்லைககளுக்கு இடையில் ஒரு பொருள் அறுவடையாகி சந்தை வந்து வருமானம் ஈட்ட முடியாமல் போகையில் கடன் தொல்லை தாங்காமல் இறந்து போகும் விவசாயிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து தான் வருகிறது.....

எங்களின் தாத்தா வீட்டில் ஆடு ,மாடு , கோழிகள் என அத்தனை செல்வங்களும் இருந்தன.... உரத்திற்கு நாங்கள் நம்பியது மாடுகளின் கழிவையும் வீட்டு உணவுப் பொருட்களின் கழிவையும் தான்.... உணவு எங்கள் வயல்களில் விளைந்தது... காய் கறிகள் எங்கள் தோட்டத்தில் விளைந்தது .... பால் பொருட்கள் எங்கள் வீட்டு மாடுகளிடம் இருந்து கிடைத்து ..... சீக்கு என யாரும் மருத்துவமனை சென்றதில்லை......

பல்லாயிரம் ஆண்டுகளாக உழவான்மையாக இருந்த விவசாயம் கடந்து சென்ற 70 வருடங்களுக்குள் தொழில்நுட்ப , ஆலை சம்பத்தப்பட்ட தொழிலாக மாற்றம் அடைந்தது... நிலத்திற்கு செயற்கை உரம் கொடுத்து மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளை கொண்டோம்.. நுண்ணுயிரிகளை தின்று வாழும் சிறு சிறு பூச்சிகளை சாகடித்தோம்... பூச்சிகளை உண்டுவாழும் பறவை இனங்கள் இன்று விழிம்பு நிலை உயிரிகளாக கருத்தப்படும் நிலைக்கு மாற்றிவைத்து விட்டோம்...... பூச்சிகொல்லிகள் அடித்து பூச்சிகளில் இருந்து சிலந்தி மற்றும் மண்ணிற்கு வளம் சேர்த்த அத்தனையும் செத்தது....

அப்பூச்சிக்கொல்லிகளை உண்டு உயிர் வாழும் காய் கனி கீரைகளை உண்டு நாமும் விஷமானோம்... விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த காளைகளும் பசுக்களும் அடிமாடுகளாக்கப்பட்டன.... பசுவில் இருந்து பெற்ற பாலுக்கு இணையாக ஆவின் தருகிறோம் என்று ஊழல் மிகுந்த பாலை நாம் குடிக்கிறோம்.... ஆடுகளும் கோழிகளும் இன்றைய காலக்கட்டத்தில் அசைவக்கடை விளம்பர பலகையில் வெறும் புகைப்படமாகவே காணக் கிடைக்கிறது.... பசுமை புரட்சி செய்த பாலாய் போன வேலையால் ஒரு செடியை வளர்க்க விவசாயி செயற்கையை மட்டுமே நம்பி வாழும் காலம் இன்றைய விவசாயத்தில்......

தொழில் நுட்பம் வளர வளர மரபணு உணவு உள்ளே செல்ல செல்ல நாம் மருத்துவமனைகளுக்கு செல்லும் நாட்கள் அதிகமாகின்றன ... நம்முடைய மருத்துவ செலவுகள் அதிகமாகின... புத்துப்புது நோய்கள் உருவாகின.. அவற்றை குறைக்க அதிகப்படியான பணச்செலவில் ஆராய்சிகள் நடத்தப்படுகின்றன ........

இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை பெறுங்கள்..... உங்கள் குழந்தைகளுக்கு வேளாண் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுங்கள்... நீங்கள் லண்டனிலே இருந்தாலும் நிச்சயம் உங்கள் அப்பாவும் பாட்டனும் நிச்சயமாக எதாவது கிராமத்தில் விவசாயிகளாகத்தான் இருந்திருப்பாகள்...... ஒவ்வொரு பண்டிகை கொண்டாடும் போதும் அதற்கான தேவைகளை குழந்தைகளிடம் சொல்லி கொண்டாடுங்கள் ஏனெனில் நாம் எதை விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்வோம் ........


தோழமைகள் அனைவருக்கும் என்னுடைய அறுவடைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.......... பொங்கட்டும் தித்திப்பான பொங்கலும் விவசாயம் பற்றிய சரியான எண்ணங்களும்........


வாழ்த்துக்களுடன்

மகிழினி

எழுதியவர் : நித்யா (14-Jan-15, 3:48 pm)
பார்வை : 589

மேலே