பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை

-ஒரு விளக்கம்

அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல.

பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை.

எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தொ¢ந்திருக்கும்.

அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம்.

அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள்.

அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.

அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

நன்றி வரகூரான் அண்ணா

எழுதியவர் : முரளிதரன் (14-Jan-15, 8:35 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 204

மேலே