வெண்பா எழுத மேலும் சில குறிப்புகள்

கல்பனா பாரதியின் 'வெண்பா எழுதுவோம்' கட்டுரையைப் படித்து விட்டு, கீழேயுள்ள என் மூன்று கட்டுரைகளையும் படிக்கவும்.

1. நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 1
2. நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 2
3. நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 3

வெண்பாக்கள் நான்கு வகைப்படும்.

குறள் வெண்பா - 2 அடிகள் - 7 சீர்கள்

சிந்தியல் வெண்பா - 3 அடிகள் - 11 சீர்கள்

அளவடி வெண்பா - நான்கு அடிகள் - 15 சீர்கள்

பஃறொடை வெண்பா 5 - 12 அடிகள் - ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள், (எல்லா வெண்பா வகையிலும் ஈற்றடியில் 3 சீர்கள்).

ஒவ்வொரு சீரிலும் குறைந்தது 2 அசைகள் வரவேண்டும். மூன்றாவது அசை வரலாம். அது காய்ச்சீராகத்தான் (நேரசை) இருக்க வேண்டும். கனிச்சீர் (நிரையசை) வரக்கூடாது.

ஈற்றடி ஈற்று சீரில் ஒருசீர் வந்தால் நேரசையிலும் வரலாம், நிரையசையிலும் வரலாம்.

பு
பே
இல்
கூழ்
பிற
திரு
படும்
அறம்
பொருள்
துணை
கடை
தலை

இரண்டாவது சீர் வந்தால் ஓரெழுத்துதான் வரும், அது உகரத்தில் அமையும் எழுத்தாகும்.

நன்று
பேறு
உலகு
அளறு
அனைத்து
பாற்று
சிறப்பு
தொடர்பு
இனிது
அவர்க்கு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-15, 9:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

மேலே