புவியீர்ப்பு விசை!

பெண்ணே உன்னை
மறக்கவும் முடியவில்லை!
மனதுக்குள்
புதைக்கவும் முடியவில்லை!
இதனால்
படிக்கவும் முடியவில்லை!
புவியீர்ப்பு விசைபற்றி
பள்ளியில் படித்ததாய் ஞாபகம்!
உன்னை
பார்த்தபின்புதான்
புரிந்தது நீயுமொரு
ஈர்ப்புவிசைதான் என்று!
பூமி
சூரியனை
சுற்றி வருகிறது!
நான்
உன்னை
சுற்றி வருகிறேன்!
ஆம்!
நான்
விழிப்படையும் வரை!