+பொங்கலோ பொங்கல்+

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்!
தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்!

சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும் சிறக்கட்டும்!
சிறப்பான‌ வயற்காடும் செழிப்பாக விளையட்டும்!
பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்!
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்!

போற்றட்டும் புகழட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்!
பறக்கட்டும் புவிஎங்கும் சமாதான கொடிமட்டும்!
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்!

திக்கெட்டும் எட்டட்டும் பொங்கலெனும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்!

=======================================================
(சிறிய மாற்றத்துடன் இதே பாடல்)

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்!
தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்!

சிறக்கட்டும் சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும்
சிறப்பான‌ வயற்காடும் செழிப்பாக விளையட்டும்!
பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்!
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்!

போற்றட்டும் போற்றட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்!
பறக்கட்டும் பறக்கட்டும் சமாதான கொடிமட்டும்!
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்!

திக்கெட்டும் திக்கெட்டும் எட்டட்டும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்!

=======================================================
(டாக்டர் வ.க.கன்னியப்பன் ஐயா அவர்களின் கண் பட்டவுடன் வெண்பா உரு கொண்டு இதே பாடல்)

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் - பொங்கட்டும்!
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்
தங்காமல் வேசம் அழிந்து! 1

இரு விகற்ப நேரிசை வெண்பா

சிறக்கட்டும் நம்உழவர் வாழ்க்கை சிறக்க!
சிறப்பாய் வயற்காடும் சேர்ந்தே - சிறக்க
பரவட்டும் என்றுமே சந்தோசம் நன்கு!
பரவாமல் போகவேயேழ் மை! 2

போற்றட்டும் என்றும் உலகம்நம் போராடும்
வேற்றுமைஇல் நற்குணம்;கண் டேயெதிராள் - தோற்று
பறக்கட்டும் நம்சமாதா னக்கொடிக் கோலே!
இறக்கவே தீவிரவா தம்! 3

திக்கெட்டும் எட்டட்டும் பொங்கலெனும் வோசையே
திக்கின்றி நிற்கட்டும் சோகத்தின் - எக்காளம்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போலமகிழ்ச் சி! 4

(மிகவும் நன்றி ஐயா!)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Jan-15, 6:22 pm)
பார்வை : 2487

மேலே