இனிவரும் பொங்கல்

வறுமை விரட்டும் வளமை
பஞ்சம் போக்கும் பசுமை
விவசாயிகள் எங்கள் நிலைமையாக

ஏமாற்றத்தை எதிர்க்கும் எழுச்சி
புதுமையை புகுத்தும் புரட்சி
குணங்கள் எங்கள் வாழ்க்கையாக

வளமையான வயல்களாக
பசுமையான பயிர்களாக
எங்கள் நிலங்களாக

தன்னபிக்கை தமிழர்களையும்
வீறுகொண்ட விவசாயிகளையும்
உருவாக்கும் பொங்கலையும்

இனிவரும் தமிழர் திருநாள் கண்டிட
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள் விவசாய நண்பனிடமிருந்து

எழுதியவர் : சு.முத்துக்குமார் (16-Jan-15, 6:56 am)
Tanglish : inivarum pongal
பார்வை : 101

மேலே