களை பறித்திடு
என் மதியை மதிப்பிட உமக்கு எந்த அருகதையும் இல்லை
என் விதியை எழுதிட நீ அந்த பிரம்மனும் இல்லை
உலகமா நரகமா அந்த சொர்க்கமா என்பது
என்றைக்கும் என் விருப்பம் மட்டுமே!
அந்நியரிடம் அண்டி பிழைக்கும் உமக்கு
நம்மவரை மண்டி இடச் சொல்ல என்ன திமிரடா?
விரோதிகளை வீரியம் கொண்டு
விரட்டியடிக்க தெரிந்த தமிழா ! நீ
துரோகிகளை தூர்வார மறந்து
தொலைந்து போகிறாயடா நிழலா!
சாத்திரம் பயின்ற பயலுக்கு
சாணக்கியம் எத்துனை சிரமம்?
நரசிம்ம அவதாரம் பூண்டு வருகிறேன் இதோ!
உன் நரமாமிச அரிதாரம் கிழித்து எறிய!