யுத்தப்புழுதி - சந்தோஷ்

தோல்வியா ? வெற்றியா ?
வெட்டியாய் எழும் சிந்தையும் தேவையா ?
முயற்சி இல்லா வரும்
வெற்றியும் மானக்கேடு இல்லையா ?


தோல்வியில் பிறக்காத தன்னம்பிக்கையும்
உன்வாழ்வின் மாபெரும் பின்னடைவுதானே ?
எது வேண்டும் ? எது வேண்டாம் ?
முடிவும் ஒரு பகுத்தறிவு தானே ?

மனமே மனமே ..! நீ
காகிதத்தில் எழுதிய இலட்சியக்கனவுகள்
களத்தில் காணாததும் அவமானம்தானே ?

வஞ்சக கடப்பாரை உன் முதுகிலா ? அன்பு
புறக்கணிப்பு தோட்டா உன் நெஞ்சிலா ?
வலிகளை பொறுத்துக்கொள் -தலைவிதி
வரிகளை அழித்துக்கொள் -சாதிக்கும்
வழிகளை தேடிக்கொள் ..!

உன் வீரநடைக்கு தடைப்போடும்
காரணிகள் எதுவென்றாலும் - அது
உன் காதலே என்றாலும்
காலால் எட்டி உதைத்திடு
கம்பீரமாய் தன்மானத்தோடு
வீறு நடைபோடு ...!

எது உன் இலட்சியமென்று
எது உன் பாதையென்று
எது உன் திசையென்று
தீர்க்கமாய் தீர்மானம் போடு..
நம்பிக்கையோடு போராடு ..! - நாளைய
எட்டுதிசையும் உனது விடியலே ..!

ஓடு மனமே .,.. ஓடு ..!
வெற்றி வெற்றி என்று
வெறி ஏற்றி , வியர்வை கக்கி ஓடு ...!

இன்று நீ சிந்தும் இரத்தம்
நாளையுன் சரித்திரத்தின் வெடிசத்தம் ..!
இன்று நீ சிந்தும் இரத்தம்
நாளையுன் தலைமுறையின் தேசியகீதம் ...!

ஓடு ஓடு .. நம்பிக்கையோடு ஓடு
வெற்றி மலை அருகில்தான் ஓடு
மனமே ஓடு ...!

மனமே .. மனமே .... உன் உற்சாக
இரத்தம் கொதிக்கட்டும் ..... உன்
பாதம் யுத்தப்புழுதி கிளப்பட்டும் ..!!

அயராது நீ முயற்சித்தால் இந்த
அண்டமும் வெற்றியில் வெடிக்கும் ..!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (17-Jan-15, 6:42 pm)
பார்வை : 520

மேலே