மாறவில்லை மனிதம்
காற்றை போல்
தேவையாய் இருப்பவரை - மட்டும்
காசை போல்
பத்திர படுத்துவது - மனித இனம் ..!
கை பேசிக்கு முன் பணம்
கணினிக்கு வலை தளம்
விடுமுறை தின கொண்டாட்டம்
விலைக்கு வாங்கு சந்தோசம்
என்ற பரபரப்பு கமழ
வாழ்கை மாறிவிட்டாலும் ..
மாறவில்லை மனிதம் ..!
தொலைத்து விட்டதை யோசிக்கும் பழக்கம்
தூரமானவரை மட்டும் நேசிக்கும் பழக்கம்
இது தான் மனிதனின் வழக்கம் ..!