சாடல்

நிலவுடன்
நெருக்கமாய்
மெய்யாளும்
புன்னகை.....

மொய்க்கின்ற
ஈக்களும்
நுகராத
வாசனை....

கற்பனை
நுழைகின்ற
கற்பூர
சிந்தனை....

கவிக்காத
கார்முகிலும்
கற்கின்ற
போதனை...

மார்போடு
மன்றாடும்
திரைச்சீலை
கனவுகள்...

மரணிக்கும்
மெளனத்திடம்
புழம்பிடும்
நிகழ்வுகள்...

நகைக்கின்ற
தருணத்தை
நிரப்பிடும்
நிரலிகள்....

சளைக்காத
இசையை
பரப்பிடும்
அருவிகள்....

சமயம்
பார்க்கும்
சாதுர்ய
தூரிகை...

சட்டென
விரிக்கும்
சல்லாப
பறவை...

தூண்டலின்
வெளிப்பாடாய்
துடிபட்ட
மீசை....

தூங்காமல்
விழிப்புடன்
விடுபட
ஆசை......

எழுதியவர் : அன்வர்தீன்... (20-Jan-15, 2:36 am)
Tanglish : saadal
பார்வை : 109

மேலே