விடியலுக்கு விடுதலை கொடுப்போம் - எங்கும் ஒளி நிறையட்டும்
உனக்குள் உண்டு சக்தி - அதை
உணர்ந்தால் உண்டு வெற்றி...!
உன்னை நீயும் வென்றால் ....
உலகில் அதுவே வெற்றி....!
புது விதியை உனக்குள் எழுது
புது விடியல் என்பது அதுவே
போனது என்பது நேற்று
புரிந்து கொள் இந்நொடி விடியல்
வெளிச்சம் என்பது உன்னிடம் - அதன்
விவரம் தன்னம்பிக்கை என்பதே...!!