ஆசைகள்
சூரியனே!!
உன்னை தொட்டுப்பார்க்க ஆசைதான்,
நீ , என்னை சுட்டெரிக்காமல் இருப்பாயென்றால்....
விண்ணே !!
உன்னை எட்டிப்பிடிக்க ஆசைதான்,
நான் மேகமாய் பிறந்திருந்தால் ....
உலகமே!!
உன்னை சுற்றிப்பார்க்க ஆசைதான்,
நான் பறவையாக பிறந்திருந்தால்....
கடலே !!
உன்னில் விளையாட ஆசைதான்,
நீ சுனாமியாக மாறாமலிருப்பாயென்றால்....
ரோஜாவே!!
நீயாக மாற ஆசைதான் ,
உன்னில் முள் இல்லாமலிருக்குமென்றால்....
தென்றலே !!
உன்னோடு உறவாட ஆசைதான்...
நீ, புயலாகாமல் இருப்பாயென்றால்.....
தோழியே !!
கனவு காண ஆசைதான்..
என் ஆசைகள் நனவாகும் என்ற நம்பிக்கையில்... ....