கிழித்துக் கழித்தல்

கிழித்துக் கழித்தல்................

நாளை நாளையென
நாட்கள் கடத்தி
நாட்காட்டியில் நாட்கள்
கிழித்தோம் அதிவேகமாய்......
ஆகட்டும் அடுத்த வருடமென
காத்திருந்தோம் எதையோ
சிந்தித்தபடி...........

கிழித்தோம் கழித்தோம்
நாட்களாய் பல வருடங்களை.......
சூரியன் வீட்டிற்குள் நுழைந்து
சுள்ளென அறைந்து
எழுப்பிய பின்னும்
அனந்தசயனம் கொண்டோம்.........
வெறுமையாய் காலம்
கடத்தும் வித்தையை
தயவின்றி கற்றுக்
கொடுத்தோம் வரும் மரபினருக்கும்...........

அரசென்ன செய்ததென்று
மார்தூக்கி கேள்விகள் கேட்டோம்
நாமென்ன செய்தோமென்று
சற்றும் யோசிக்காமல்..........
நாளை நாளையென
நாட்கடத்தல் செய்வதே
கையாலாகதவரின் முதல் படி
இன்றே இப்பொழுதே
இக்கணமே என்பதே
வெற்றியின் முதல் படி
எடுத்து வை முதல் படி
மிதித்திடு வெற்றிப்படி............!

.....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (16-Jan-15, 1:15 pm)
Tanglish : kilithuk kazhithal
பார்வை : 253

மேலே