மிரட்சி குழப்பம்

மணப்பெண் கண் கண்டேன்
கருநிழல் முன் கண்டேன்
இருவிழி மிரட்சி குழப்பம்
சரிவிகித கலவை தான் கண்டேன்

இமைகள் இன்னும் முனைந்து
இடம் பொருள் இவள் மறந்து
அலைபேசியின் முகப்பின்மேல்
மருதாணி விரல் கீறல் கண்டேன்

அலைபோல கூந்தல் புரளும்
அதன்கூட நெற்றிசுட்டி திணறும்
எதை புதிதாய் கண்டாளோ நிறம்
நொடிபொழுதினில் மலரும்

ஐந்து நிமிடம் இன்னும் முடிவதற்குள்
ஐந்து விதமான முகபாவம் சலனம்
கைபிடிக்க நிற்பவனை உற்று பார்த்தேன்
தாக்குபிடிக்க முடியுமாடா இந்த உக்ரம்

எழுதியவர் : karmugil (16-Jan-15, 8:18 pm)
Tanglish : miratchi kulapam
பார்வை : 141

மேலே