தடைகள் இல்லையம்மா - உதயா
தடைகள் இல்லையம்மா
தரணியெங்கும் நடைபோட
முட்களும் மெத்தையாகும்
முயற்சியோடு நடைபோடு
வானும் உன்கையில்
வருங்காலம் உனக்கம்மா
வறுமையை காரணமாக்கி
காலத்தை கரைத்துவிடாதே ...
பாவிகளின் மோகத்திற்கு
உம்மேனி இறையில்லையம்மா
பார்வையை நெருப்பாக்கி
பாவிகளை சாம்பலாக்கு
வீர நடைகொண்டு
வீதியெங்கும் உன்காலாட
காற்றும் குடையாகும்
கன்னி உமக்கு நிழலாகும்
பகலவன் துணையோடு
பாரெங்கும் மனம் பறக்க
பாவை உனக்கிங்கே
இடைஞ்சல்களும் இல்லையம்மா
உலகை செதுக்கிடவே
உம்முரிமைகளும் முளைத்திடவே
துயிலை துரத்திவிட்டு
துணிவோடு போராடு
மலைகள் தடையானால்
கனவுகளை தென்றலாக்கு
அன்பெனும் குணம்கொண்டே
மலைகளையும் மண்ணாக்கு
எதிர்ப்பும் இல்லையம்மா
முற்றும் இல்லையம்மா
தன்மானம் இழைக்காமலே
தன்னம்பிக்கையோடு போராடு ...